நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்
Sunday, 15 January 2017
Tuesday, 23 August 2011
Saturday, 4 June 2011
அதுவும் கூடாது இதுவும் கூடாது!
பாரதப்போரின் உச்சக்கட்டம்...கர்ணனுடன் அர்ஜுனன் விற்போர் செய்தான். ஆனால், கர்ணனின் ஆக்ரோஷத்துக்கு முன்னால், அர்ஜுனனின் காண்டீப சாகசங்கள் எடுபடவில்லை. பாசறைக்கு திரும்பிய அவனை தர்மர் அழைத்தார்.
""போர் செய்யும் லட்சணமா இது! உனது காண்டீபத்தை (வில்) உலகப்புகழ் பெற்றது என்றும், நீயே வில்வித்தையில் சிறந்தவன் என்றும், நீ வைத்த குறி தப்பாது என்றும் ஆன்றோர்கள் சொல்வதாக பெருமையடித்துக் கொண்டாய். இப்போது என்னாயிற்று உன் காண்டீபத்தின் வல்லமை,'' என இகழ்ச்சியாகப் பேசினார் தர்மர்.
அண்ணன் தர்மர் சொன்ன வார்த்தைகள் தம்பி அர்ஜுனனின் மனதை உறுத்தியது. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன் காண்டீபத்தை யாராவது கேலி செய்தால், அவர்களைக் கொன்று விடுவதாக சபதம் செய்திருந்தான் அர்ஜுனன். எனவே, அண்ணன் என்றும் பாராமல், அவரை நோக்கி வில்லை உயர்த்தினான். கண்ணபிரான் ஓடிவந்து தடுத்தார். அவரிடம், தனது சபதத்தை விளக்கினான் அர்ஜுனன்.
கண்ணன் ஒரு யோசனை சொன்னார்.
""அர்ஜுனா! ஒருவரைக் கொலை செய்து தான் அவரது <உயிர் போக வேண்டும் என்பதில்லை. அவர் மீது வீணான பழி போட்டாலே கொலை செய்ததற்கு சமம். எனவே, தர்மர் மீது ஏதாவது பழிபோடு,'' என்றார். அர்ஜுனனும் ஏதோ ஒரு பழியைப் போட்டு சபதத்தை நிறைவேற்றினான். பின்னர், தன் அண்ணனைக் கொன்றதற்கு சமமான பாவத்தை செய்துவிட்டோமே என மனம் வருந்தி தற்கொலைக்கு முயன்றான். அப்போதும் கண்ணன் தடுத்தார்.
""அர்ஜுனா! இதென்ன விபரீதம்! சாஸ்திரத்தில் இதற்கும் பரிகாரம் உண்டு. உன்னை நீயே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்கு சமம். நீ உன்னைப் பற்றி ஜம்பமாக பிறரிடம் ஏதாவது பேசு,'' என்றார்.
பிறர் மீது பழிபோடுவதும், தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் கொலைக்கும், தற்கொலைக்கும் ஈடானது என்பதைப் புரிந்து கொண்டீர்களா!
Thanks to Dinamalar

Saturday, 19 March 2011
Monday, 28 February 2011
அஞ்செழுத்து அஸ்திவாரம்
ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார்.
இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.
""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்

Tuesday, 15 February 2011
பெண்கள் - பணிகளில் அடங்கிய பயிற்சிகள்
துணி துவைத்துப் பிழிதல் - கை அழுத்தப் பயிற்சி
பெருக்குதல், வீடு துடைத்தல் - இடுப்புப் பயிற்சி
பாத்திரம் கழுவுதல் - கைப் பயிற்சி
சப்பாத்தி இடுதல் - முழங்கை அசைவுப் பயிற்சி
மாவு பிசைதல் - விரல்களுக்கான பயிற்சி
தேங்காய் துருவுதல் - தோல் பயிற்சி
வீடு ஒட்டடை அடித்தல் - கழுத்துப் பயிற்சி
தோசை சுட்டு உபசரித்தல் - ஓட்டப் பயிற்சி
பரணியிலிருந்து பொருட்களை இறக்குதல்/ ஏற்றுதல் - கணம் தூக்கும் பயிற்சி
வீட்டை சுற்றி வந்து பொருட்களை ஒழுங்குபடுத்துதல் - நடைப் பயிற்சி
குழந்தைகளை குளிப்பாட்டுதல் - அடிவயிற்றுப் பயிற்சி
மொட்டை மாடி ஏறி, வற்றல் போடுதல் - மூட்டுப் பயிற்சி
பால்கணக்கு, மளிகை கணக்கு போடுதல் - மூளைக்கு பயிற்சி
பாடம் சொல்லித் தருதல் - நினைவுப் பயிற்சி
கணவரிடம் திட்டு வாங்கும் பொழுது ( இதுவும் வேலைகளில் ஒன்று தான்) - இதயம் வலுப்பெறுகிறது
வளர்த்த பிள்ளைகள் வசைபாடும் பொழுது - மனம் பக்குவமடைகிறது
உற்றார் உறவினர் குறை சொல்லும் பொழுது - கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்ற ஞானம் கிடைக்கிறது
Thursday, 10 February 2011
உயிருடல்
குருவும், அவரை நாடி வந்த சீடரும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி.(கற்பனையே)
ஆ: தங்கள் வயது என்ன?
கே:முப்பத்தியாறு
ஆ:யோசித்து சரியாகக் கூறுங்கள்?
கே:முப்பத்தைந்து வயது, ஒன்பது மாதம், இருபத்தொரு நாள்.
ஆ:தாயிடமிருந்து பிறந்து இவ்வளவு நாள் ஆகியுள்ளதா?
கே:ஆமாம்.
ஆ:அதற்க்கு முன் நீங்கள் இல்லையா?
கே:தாயின் கர்ப்பத்தில் பத்து மாதங்கள் இருந்தேன்.
ஆ:அதற்க்கு முன் நீங்கள் இல்லையா?
கே:தெரியாது.
ஆ:அதற்கு முன், தந்தையின் கருவறையில் விந்தணுவாக இரண்டு மாதங்கள் இருந்தீர். அதற்க்கு முன் அவன் இரத்தத்திலும் அதற்குமுன் அவன் உண்ட ஆகாரத்திலும் உயிரணுவாக இருந்தீர்கள். அப்படியானால் செத்த பின் எங்கே, எப்படி இருப்பீர்கள்?
கே:ஒன்றுமில்லை.
ஆ:அப்படித்தான் எல்லோரும் தீர்மானமாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அறியாமை இருள் அழுத்தி மூடிக் கொண்டிருகிறது. (கையை மூடிக் கொண்டு) இதனுள் என்ன இருக்கிறது?
கே:தெரியாது.
ஆ:(கையைத் திறந்து காட்டி) இப்போது கூறும்?
கே:சாவிக்கொத்து கையில் இருந்தது.
ஆ:திறந்து காட்டினால் தெரிந்தது
ஆமாம்.
ஆ:தெரிந்து கொள்ள முயலுங்கள். நாளைக்கு எங்கே இருப்பீர்கள்?
கே:கோயம்புத்தூரில்.
ஆ:அங்கு செல்ல எண்ணியுள்ளீர்கள். அது போல செத்தபின் எங்கே போகவேண்டும்மென்று குறி வைத்து செல்ல வேண்டும் என . அதவாது
சுவர்க்கம், நரகமென்று சொல்கிறார்களே?
கே:அதை நம்பமுடியவில்லை.
ஆ:நீங்கள் நமபாததால் அது இல்லாமல் போய்விடுமா? தெரிந்து கொள்ள முயல வேண்டாமா? உங்களுக்குள் இருக்கும் உயிரை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கே:உயிரைப் பார்க்க முடியாது.
ஆ:ஏன் முடியாது.
கே:உயிருக்கு உருவமில்லை.
ஆ:உன் கண்ணுக்கு தெரியாததால் அதற்க்கு உருவமில்லையா? காற்றைப் பார்க்க முடியாதென்பதற்க்காக அது இல்லாமல் போய் விட்டதா. (ஒரு பொருளைக் காட்டி) இதைப் பார்ப்பது எது?
கே:கண்.
ஆ:பிணத்திடம் கண் இருந்தாலும் பார்க்க முடியாது. ஆகவே கண்ணைக் கருவியாகக் கொண்டு காண்பது உயிர். அது போல இன்பதுன்பம் அனுபவிப்பது, கேட்பது, ருசிப்பது, நுகர்வது, பேசுவது, சம்பாதிப்பது எல்லாம் உயிர் தான். உயிர்பொருள் உடலெடுக்க நான்கு வழிகள் இருக்கின்றன தெரியுமா.
கே:தெரியாது.
ஆ:புழுக்கத்தால் ஊர்வனவாகவும், வித்திலிருந்து தாவரங்களும், முட்டையிலிருந்து பறவை இனங்களும், சினை தரிப்பதால் மிருகங்களும், மனிதன் முதலானவகைகளும் உடலெடுத்துத் தோற்றத்துக்கு வருகின்றன. அவைகளை எழுவகை என்றனர் ஆன்றோர்.
கே:அவையாவை.
ஆ:ஊர்வன, நீர்வாழ்வன, தாவரங்கள், பறவை இனம், விலங்கினம், மனிதன், தேவர்-- என எழுவகைத் தோற்றம்.
கே:மனிதன் வரை ஆறும் தெரிகின்றது, தேவர் யாறன தெரியவில்லையே.
ஆ:மனித உருவில் மிருகங்களும் இருக்கின்றன. தேவர்களும் இருக்கிறார்கள்.
கே:இதனை பிரித்தறிவது எங்கனம்.
ஆ:ஊனக் கண்ணால் வெளியுலகை மாத்திரம் காணக்கூடிய மனத்தால் வளர்பவர் மனிதர். ஒரு சற்குரு பெருமானுடைய பரிசுத்த தேவ ஆவியால் மறுபிறப்படைந்து ஞானக் கண்ணால் ஆன்ம லோகம் தெரியப் பெற்று தேவ ரகசியங்கள் தெரிந்தவர் தேவர்கலாகும்.
கே:ஆன்ம லோகம் எங்கிருக்கிறது.
ஆ:காணும் உடலில் காண முடியாத உயிர் ஊடுருவி இருப்பது போல காணக் கூடிய அண்டசராசரங்கள் அவ்வளவிலும் ஊடுருவி நிலைத்து நிற்பது ஆன்மலோகம். முதலில் தனக்குள் இருக்கும் உயிரைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கே:உடல் முழுவதும் ஊடுருவி நிற்கும் உயிரைத் தனியாக காண்பது எப்படி?
ஆ:ஒரு வித்து மரமாக வளர்ந்தபின் அதன் உயிராகிய முனை ஆணிவேரான ஓரிடத்தில் இருக்கும். அதைப் போல தந்தையின் விந்தணுவும், தாயின் சினைமுட்டையும் சேர்ந்து இந்த உடல் உண்டானாலும் உயிரின் மூலமான விந்து ஓரிடத்தில் தான் இருக்கிறது. அங்கு தான் மனம் இயங்குகிறது. அறிவு மறைந்திருக்கிறது.
கே:எங்கே?
ஆ:தேவரகசியம் என்பதால் அதை வெளிப்படையாக பேச முடியாது.
கே:அதை மறைப்பானேன்.
சிற்றின்ப விசயங்களைப் பேசக்கூடாதேன்பதைப் போல, பேரின்ப ரகசியங்களைப் பக்குவம் வந்தவருக்கு பக்குவம் பெற்றவர்கள் பக்குவப்படி வெளியாக்க வேண்டும். தூல சம்பந்தத்திற்கு திட்டமிட்டு திருமணம் செய்வது போல ஜீவா சம்பந்தத்திற்கு அதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்க்கு முன் உயிர் உடலைக் கட்டும் விதம் தெரிய வேண்டும். அதை அடைவதற்கு யோகம் உனக்கு உதவும். அந்த யோகம் இப்போது அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் விதத்தில் உள்ளது. பெற்று பேரின்பமடையவேண்டும்.
வாழ்க வளமுடன்

Thursday, 20 January 2011
பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?
மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.
" உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான்" எனபது நினைவு கூறத்தக்கவை. ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா?
கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும். யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது. அதனால், வருபவர் கோபம் தணிந்துதான் வீட்டுக்குள்ளே வருவார். இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்.

Sunday, 26 December 2010
உயிர்மெய்
பிறப்பு என்பது ஒரு தமிழ்ச் சொல். அது ஓர் உயிரானது உடலோடு சேர்ந்து உலகத்துக்கு வருவதைக் குறிக்கின்றது.
இறப்பு என்பது இன்னொரு தமிழ்ச் சொல். அது இந்த உலகத்தில் உடலோடு சேர்ந்து வாழ்ந்த உயிர், உடலை விட்டு பிரிந்து போவதைக் குறிக்கின்றது.
பிறப்பின் தன்மையையும் இறப்பின் தன்மையையும் இந்த இரு தமிழ்ச் சொற்கள் குறிப்புட்டு காட்டுவதைப் போல பிற மொழியில் உள்ள அதற்கு நேரான சொற்கள் குறிப்பிடுபவனாக இல்லை. பிறப்பு, இறப்பு என்னும் சொற்களில் உள்ள எழுத்துக்களில் முதல் எழுத்தைத் தவிர மற்ற மூன்று எழுத்துக்களும் ஒன்றாகவே உள்ளன.
பிறப்பு என்பதில் உள்ள முதல் எழுத்து "பி" இது ஓர் உயிர் மெய் எழுத்து. அதாவது உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து பிறக்கின்ற எழுத்து.
'ப்' என்பது மெய்யெழுத்து 'இ' என்பது உயிர் எழுத்து. இரண்டும் சேர்கின்ற பொழுது ப் + இ = பி என்று ஆகிறது.
உலகத்தில் உடலும் உயிரும் சேர்ந்து பிறப்பதைக் குறிக்கின்ற சொல்லில் உள்ள 'பி' என்னும் முதல் எழுத்தே அந்த உண்மையைச் சுட்டி காட்டுகிறது.
பி - என்னும் உயிர்மெய் எழுத்திலிருந்து 'ப' என்னும் மேய்யேளுத்தை நீக்கிவிட்டால், விட்டு விட்டால், தனித்து நிர்ப்பது 'இ' என்னும் உயிர் எழுத்து.
உடலை விட்டுப் பிரிந்து உயிர் தனித்து நிற்கின்ற நிலைதானே இறப்பு என்பது! இறப்பு என்னும் சொல்லில் உள்ள 'இ' என்னும் முதல் எழுத்தே அந்த உண்மையைச் சுட்டி காட்டுகிறது.
உயிர் உடலோடு சேர்வது 'பிறப்பு'
உயிர் உடலை விட்டுப் பிரிவது 'இறப்பு'
மெய் என்றால் உடல், மெய்யெழுத்து என்றால் உடல் போன்ற எழுத்து. புள்ளி உள்ள எழுத்து உயிரோடு சேராத உடல் தனித்து இயங்க முடியாது.
நிற்கவும் முடியாது. இந்த உண்மையைக் காட்டுவது போலத்தான் மெய்யெழுத்து மொழிக்கு முதலில் ஒரு சொல்லின் முதலில் வரக்கூடாது என்று இலக்கணம் கூறுகிறது.
எனவே 'ப்ரேமா'- என்று தமிழில் எழுதக் கூடாது. பிரேமா என்று தான் எழுத வேண்டும்.

Wednesday, 15 December 2010
மனம் பற்றற்றிருக்க...
துறவு என்றால், காவியுடை அணித்து காட்டுக்குப் போய் விடுவது; அல்லது ஏதாவது ஒரு மடத்தில் போய் சேர்ந்து விடுவது; மனைவி மக்களையும் வீட்டையும் விட்டு ஓடி விடுவது என்றுதான் பொதுவாக நாம் எண்ணுகிறோம்.ஆனால், உண்மையில் துறவு என்பது மனத்துறவு தான். மனம் எந்த பொருளிடத்திலும் யாரிடத்திலும் ஒட்டுதல் இல்லாமல் பற்று இல்லாமல் இருப்பது தான்.
வீட்டில் இருந்து மனைவி மக்களோடு வாழ்ந்தாலும் பற்றில்லாமல் இருக்க வேண்டும். 'நான்' என்கிற செருக்கும் 'எனது' என்கிற பற்றுதலும் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த எந்தப் பொருளிலிருந்து நாம் விலகி இருக்கிறோமோ அந்த அந்தப் பொருளினால் வருகின்ற துன்பம் நமக்கு இல்லை என்பதை உணர்ந்து நம் மனத்தைப் பற்றற்ற நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மனத்தில் பற்றுதலைத் துறக்காமல், துறந்தவரைப் போல வெளிவேடம் அணித்து வஞ்சித்து வாழ்பவரைப் போல் இரக்கமற்ற கொடியவர் வேறு யாருமில்லை என்கிறார் திருவள்ளுவர்.
"நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்" -குரல் 276
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களையும் நாம் அடக்கி ஆள வேண்டும். அவை நம்மை ஆட்டிப் படைக்க விட்டுவிடக் கூடாது. அப்போது தான் பற்றற்று இருக்க முடியும்.
"ஓர் அழகான ஓவியத்தை கண்டதும் அதனை வாங்க வேண்டும்- வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்- என்று விரும்புகின்றவனை விட, அதனை வாங்க நினைக்காமல் வேடிக்கை பார்ப்பவனே மிகுதியாக அதன் அழகை சுவைக்கிறான். அதுபோல் எதனையும் நம்முடையது - நமக்காக உள்ளது என்று பற்று வைக்காமல் உலகத்தை அனுபவிக்க வேண்டும்" என்கிறார் விவேகானந்தர்.
"படகு தண்ணீரில் இருக்கலாம், ஆனால் தண்ணீர் படக்குக்குள் நுழையக்கூடாது. நுழைந்தால் படகு கவிழ்ந்து விடும். அதுபோல் மனிதன் உலகத்தில் வாழலாம், ஆனால் உலகப்பற்று அவனிடத்தில் இருக்க கூடாது" என்கிறார் இராமகிருஷ்ணர்.
"இவ்வுலகத்தில் ஒன்றும் நிலையானது அன்று. மிகவும் நெருங்கியுள்ள ஒவ்வொரு பொருளின்றும் நாம் விடுபடுதல் வேண்டும். அப்படி விடுபடுவதே பேரின்பத்திற்கு வழியாகும்" என்கிறார் புத்தர்.
"தேவைக்கு அதிகமாக சேர்த்து வைப்பதில் பற்று கொண்டால், ஆன்மா ஒரு போதும் மகிழ்ச்சி அடையாது" என்கிறார் மகாவீரர்.
மனம் பற்றற்றிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நிலையாமையைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். உடல் நிலையாமை, இளமை நிலையாமை,செல்வம் நிலையாமை ஆகியவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "பிறக்கும் பொது நாம் என்ன கொண்டு வந்தோம்? இறக்கும்பொழுது நாம் என்ன கொண்டு போகிறோம்? ஒன்றுமில்லையே! அப்படி இருக்க பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நம்மோடு வந்து சேர்ந்திருக்கும் பொருள்களின் மேல் நாம் ஏன் பற்று வைக்க வேண்டும்?.
"நம்மி கட்டி அனைத்துக் கொஞ்சுகின்ற மனைவியும் மக்களும், தச்சன் ஒருவன் மரத்தை வெட்டி சாய்ப்பது போல் காலன் உடலை கீழே சாய்த்து விட்டால், அலறி அழுது இடுகாடு மட்டும் தான் வருவார்களே அன்றி அதற்க்கு அப்பால் ஓர் அடியேனும் எடுத்து வைப்பார்களா? வைக்க மாட்டார்களே!
"நம் உடலைவிட்டு உயிர் பிரிகின்ற வரையில் தான் எல்லாம் நம்முடன் இருக்கின்றன. சொத்தும் சுகமும் வீடுவரை தான். கண்ணீர் விட்டு அழுகின்ற மனைவியோ தெருவரையில் தான். விம்மி விம்மி அழுது புலம்புகின்ற மக்களோ இடுகாடு வரையில் தான்! அதற்குப் பின் நம் உயிரோடு வருவது நாம் செய்த புண்ணியம் பாவம் என்கிற நல்வினை தீவினை தானே!" என்றெல்லாம் பட்டினத்தார் கூறும் கருத்துக்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நினைத்துப் பார்த்தால் பற்றற்ற மனம் வந்துவிடுமே!

Thursday, 25 November 2010
அவரவர் விதி !
இமயமலை உச்சியில் புத்த மடம் ஒன்று இருந்தது. அங்கே எப்போதும் பனி படர்ந்து இருக்கும். அந்த மடத்திற்குச் செல்வதே கடின முயற்சியாக விளங்கியது. புத்த துறவிகள் இருவர் அந்த மடத்திற்குச் செல்வதற்காக மலை ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர், ""காற்று வேகமாக வீசுகிறது. பனியும் மிகுதியாகக் கொட்டுகிறது. நாம் வேகமாக நடந்தால்தான் மடத்தை அடைய முடியும். இல்லையேல் வழியிலேயே சாக வேண்டியதுதான்!'' என்றார்.
இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். அவர்கள் சென்ற வழியில் முதியவர் ஒருவர் விழுந்து கிடந்தார். வலி தாங்க முடியாமல் அவர் முனகிக் கொண்டிருந்தார். இருவரும் அருகே சென்று அவரைப் பார்த்தனர்.
""மலைப் பாதையில் உருண்டு விழுந்ததால் இவர் கால் ஒன்று உடைந்துவிட்டது. இனி இவரால் நடக்க முடியாது. தாமதம் செய்தால் நம்மாலும் மடத்தை அடைய முடியாது. உடனே நாம் இங்கிருந்து புறப்படுவோம்!'' என்றார் அவர்களில் ஒருவர்.
""இந்த நிலையில் இவரை எப்படி இங்கே விட்டுச் செல்வது? நாம் இருவரும் இவரை எப்படியாவது மடத்திற்குத் தூக்கிச் செல்வோம். அங்கே உள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்வர்!'' என்றார் இன்னொருவர்.
""நாமே உயிருடன் மடத்தை அடைவோமா என்பது தெரியவில்லை. அவரவர் வினையை அவரவரே அனுபவிக்க வேண்டும். இங்கேயே சாக வேண்டும் என்பது இவர் விதி. நீர் வந்தால் வாரும்; நான் போகிறேன்!'' என்று சொன்னார் அவர். அடுத்தவரின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து வேகமாக நடக்கத் தொடங்கினார். கால் உடைந்து கிடந்தவரை அப்படியே விட்டுச் செல்ல இன்னொருவருக்கு உள்ளம் வரவில்லை. தன் உயிர் போனால் போகட்டும் என்று அவரைத் தோளில் தூக்கிக் கொண்டார். மலைப்பாதையில் ஏறத் தொடங்கினார்.
மிகுந்த எடையைத் தூக்கிச் சென்றதால் அந்தக் கடுங்குளிரிலும் அவருக்கு வியர்த்தது. துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு மலை உச்சியை நெருங்கினார். அவருக்கு முன்னே சென்ற துறவி அங்கே வழியில் இறந்துகிடந்தார். குளிர் தாங்காமல் அந்தத் துறவி விறைத்துப் போய் இறந்துவிட்டார் என்பது அவருக்குத் தெரிந்தது.
அவரைப் போல இந்தக் குளிரில், தான் ஏன் இறக்கவில்லை என்று சிந்தித்தார் அவர். அந்த முதியவரைத் தூக்கி வந்ததால் அதிகமாக மூச்சு வாங்கியது. அதனால் உடல் எங்கும் கூடுதலாக ரத்தம் பாய்ந்து வெப்பம் ஏற்பட்டது. அத்துடன் அந்த முதியவரின் உடல் சூட்டால் இருவரது உடலும் சூடு கண்டது. அதனால், கடுமையான குளிர் தன்னைக் கொல்லவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. பிறருக்கு உதவி செய்வதால் நம்மையே விளையும். அந்த உதவியே தன் உயிரைக் காப்பாற்றியது என்ற உண்மை அவருக்குப் புரிந்தது

Monday, 8 November 2010
விவேகமானவராக வேண்டுமா ?
தார்மீக விஷயங்களையும், தெய்வீக, வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு பொறுமையும் இருக்க வேண்டும். "இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா...' என்று சிலர் சொல்லலாம்.
பின்னே எதுதான் வேண்டும்? எது வாழ்க்கைக்கு உதவக் கூடியது? எது அறிவை வளர்ப்பது? எது மன நிம்மதியை அளிக்கக் கூடியது? மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் கூடியவைகளே! நிதானமாக சிந்தித்தால் தெரியும். பருத்தி பளபளப்பாக உள்ளது போல், சான்றோரின் வாழ்க்கையும் ஒளி வீசுகிறது. பருத்தி பல கஷ்டங்களுக்கு உட்பட்டாலும், நம் உடலை மறைக்கும் துணியாகிறது. சான்றோரும் மற்றவர்களின் குறை குற்றங்களை மறைக்க (நீக்க) பல இன்னல்களை மேற்கொள்கின்றனர். சான்றோர் நட்பு (சத் சங்கம்) கிடைத்தால் காக்கை குயிலாகவும், வாத்து அன்னமாகவும் மாறிவிடும் தன்மை பெறுகின்றன. அதுபோல, காக்கை, வாத்து போல் குறைகள் உள்ளவர்களும் சான்றோரின் நட்பினால் உயர்வு பெறலாம். வேடரான வால்மீகி, நாரதரின் தொடர்பால் ராம நாம உபதேசம் பெற்று, முனிவரானார். ஒரு வேலைக்காரியின் புதல்வராக இருந்த நாரதர், மகான்களின் சேர்க்கையால் ஞானம் பெற்று, அடுத்த பிறவியில் பிரம்மாவின் புதல்வரானார். சத் சங்கத்தின் மூலமே இவர்களுக்கு உயர்வு ஏற்பட்டது. சத் சங்கத்தின் மூலம் தான் அறிவு, புகழ், முன்னேற்றம், செல்வம், மங்களம் ஆகியவற்றை எந்த இடத்திலும், எந்த காலத்திலும் பெற முடியும். சான்றோர் நட்பின்றி விவேகம் வராது; விவேகம் இன்றி பக்தி வராது; பக்தி இன்றி ஆண்டவன் அருள் கிடைக்காது; அருள் இன்றேல் சித்திகள் ஏற்படாது.
சாதுக்கள் சலனமற்ற மனம் உடையவர்கள். அவர்களுக்கு நண்பன்-பகைவன் என்று யாரும் கிடையாது. மலரானது எப்படி வலது, இடது என்று வேற்றுமை இல்லாமல் இரு கைகளுக்கும் மணம் அளிக்கிறதோ, அப்படி சான்றோர் எல்லாரிடமும் அன்பு காட்டுவர். சான்றோர் தூய உள்ளம் கொண்டவர்கள், உலக நன்மை யை நாடுபவர்கள், உலக நன்மைக்கு எதிராக அவர்கள் எதையும் விரும்ப மாட்டார்கள்; உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புவர். நாமெல்லாம் எப்படியோ? சான்றோர் வரிசையில் சேர முடியுமா?

Thursday, 4 November 2010
தீபாவளி அன்று...
- ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து சீதையுடன் அயோத்தி திரும்பினார்.
- மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார்.
- நரகாசூரனை மகாவிஷ்ணு வதம் செய்தார்.
- மகாபலி மன்னன் அரியணை ஏறினான்.
- மகாவீரர் முக்தி அடைந்தார்.
- விக்கிரமாதித்யன் முடிசூடிக் கொண்டான்.
- மாவீரன் சிவாஜி, தனது எதிரிகளை வென்று கோட்டைக்குள் விளக்கு ஏற்றினார்.
- கோதார விரதம் மேற்கொண்டு சக்திதேவி சிவா பெருமானின் உடலில் பாதி பெற்றார்.
- சுவாமி ராமதீர்த்தர் தீபாவளி அன்று பிறந்து, தீபாவளி அன்று சந்நியாசம் பெற்று, ஒரு தீபாவளி அன்றே சமாதி அடைந்தார்.
- ஆதிசங்கரர் ஞானபீடங்களை ஸ்தாபித்தார்.
- சீக்கிய மதகுருவான குருநானக் முக்தி அடைந்தார்.
- குபேரன் சிவபெருமானை வழிபட்டு பல பொக்கிஷங்களைப் பெற்றார்.
- காளிதேவி 64 ஆயிரம் யோகினிகள் புடைசூழ காட்சி தந்தாள்.
நல்ல எண்ணங்கள் என்ற தீப விளக்கை ஏற்றி வைத்து, இருள் என்ற தீமையை அழிப்பதே தீபாவளி.
இறைவனுக்கே மகனாக இருந்தாலும் சில நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டுத் தான் இயங்க வேண்டும். தந்தை உயர் பதிவியில் இருந்தாலும், அவரது மகன் தவறு செய்ய அனுமதிக்க முடியாது.
தாய், தனது மகனை எவ்வளவு கண்டிப்புடனும், கண்காணிப்புடனும் வளர்த்தாலும் அவனிச் சுற்றியுள்ளவர்கள் எப்படி இருகிறார்களோ அப்படியே அவனது குணங்களும் மாறுகின்றன.
இறப்பு என்பது தவிர்க்க இயலாதது. ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படும் படியாக வாழ வேண்டும். அந்தவகையில் ஒருவன் வாழக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நரகாசூரன்.
தாய், தந்தையராக இருந்தாலும் அறம் எதுவோ, உலக நன்மைக்கு எது உகந்ததோ, அதையே என்றும் பாராமல் கிருஷ்ணரும், சத்தியபாமாவும் செய்தனர்.
செய்தது தவறு என்று தெரிந்ததும், அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவது உயர்ந்த பண்பு.
செய்த தவுறுக்காக வருந்துவதும், அதை ஒத்துக் கொள்வதும் நாம் முன்னேற்றம் அடைய உதவும்.
-நரகாசூரன் கதை தவிர, கதைகள் பல இருந்தாலும், அவற்றின் மையக் கருத்து தீமை வெல்லப்படும் என்பதாகவே இருக்கிறது.
அகங்காரம், பொறாமை, தலைக்கனம் இவற்றை நம்மிடமிருந்து அகற்ற வேண்டும் என்பதையே தீபாவளி வலியுறுத்துகிறது.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
Thursday, 28 October 2010
பூஜையின் போது மணி அடிப்பது ஏன் ?
பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர் தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; எனவே, ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர். ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறுநாள், மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தேவதைகள் வரமாட்டார்கள்! அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆலயங்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் ஓடி விடும். மறுபடியும் எப்போது திரும்பி வரும் என்று யாரும் சொல்லவில்லை. இருந்தாலும், அவை வந்து விடும் என்று மட்டும் சொல்கின்றனர்.
மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்துக்கு சிறப்பு அதிகம். அந்த மாதம் முழுவதும் பகவானுக்கு உகந்த நாட்கள். அதனால், மார்கழி மாதத்தில் எல்லாரும் விடியற் காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கிட்டு, தெய்வ பூஜையில் ஈடுபடுவர்; ஆலயங்களுக்குச் செல்வர். இம்மாதத்தில் தெய்வ வழிபாடு மும்முரமாக இருக்கும். கிராமங்கள் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படி நடக்கிறது. கிராமங்களில் மார்கழி மாதம் முழுவதும் பிரதி தினம் விடியற் காலையில் ஒவ்வொரு தெருவாக சங்கு ஊதிக் கொண்டும், மணியடித்துக் கொண்டும் வருவர். அதற்கென்று மணியடிப்பவர், சங்கு ஊதுகிறவர் உண்டு. அவர்கள் அதை தினமும் செய்வர். இதனால், கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் துர்தேவதைகள் ஓடிவிடும். கிராமம் நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக இருக்கும் என்று சொல்வர்.

Friday, 22 October 2010
குலத்துக்கும், குணத்துக்கும் சம்பந்தம் உண்டா?
ஒருவனுடைய நன்னடத்தை, நல்ல சுபாவம் இவைகளைக் கொண்டே அவன் நல்ல குலத்திலும், நல்ல குடும்பத்திலும் பிறந்தவன் என்பதை அறிந்து கொள்ளலாம். எந்த மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். "அவரை போட்டால், துவரை முளைக்குமா?" என்பர்.
ஒரு குருட்டு பிச்சைகாரனை ராஜாவின் முன் கொண்டு வந்து நிறுத்தினர் சேவகர்கள். பிச்சை எடுப்பது குற்றம் என்பது அங்கே சட்டம். அவனை விசாரித்த ராஜா, உனக்கு என்ன தெரியும்? என்று கேட்டான். 'எனக்கு மாணிக்ககல்லை பரிசோதிக்கத் தெரியும்; குதிரைகளை பரிசோதித்து நல்ல ஜாதிக் குதிரை தானா என்று சொல்ல முடியும்; மனிதர்களின் தன்மையை அறிந்து, அவர்கள் நல்ல குலத்தை சேர்ந்தவர்களா என்பதையும் சொல்லமுடியும்!" என்றான் பிச்சைக்காரன்.
'சரி! இவனுக்கு தினமும் ஒரு பட்டை சோறு கொடுத்து, சிறையில் வையுங்கள்!' என்று உத்தரவிட்டான் ராஜா. ஒரு நாள் மாணிக்ககல் கொண்டு வந்தான் இரத்தின வியாபாரி ஒருவன். அந்தக் குருடனை விட்டுப் பரிசோதிக்கச் சொன்னான் ராஜா. தன் காதுகளில் கல்லை வைத்துப் பார்த்து விட்டு, "இது மாணிக்ககல் அல்ல! இது ஒரு பூச்சிக் கூடு !" என்றான் குருடன். வியாபாரி போனபின் இதை எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று கேட்டான் ராஜா." மாணிக்கல்லானால் காதில் வைத்தால் ஓசை எதுவும் வராது; பூச்சிக் கூடானதால் காதில் வைத்ததும் 'ஞொய்' என்ற சப்தம் வந்தது, அதனால் கண்டுபிடித்தேன்... என்றான் குருடன். 'சபாஷ்! தினமும் இவனுக்கு இரண்டு பட்டை சோறு கொடு..' என்று உத்தரவிட்டான் ராஜா.
மற்றொரு நாள், ஒரு அழகிய குதிரையை கொண்டு வந்தான் குதிரை வியாபாரி ஒருவன். குருடனை விட்டுப் பரிசோதிக்கச் சொன்னான் ராஜா. குதிரையின் முதுகில் கைவைத்த குருடன், 'இது அசல் ஜாதிக் குதிரை அல்ல......' என்றான். இதை எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று கேட்டான் ராஜா.ஜாதிக் குதிரையானால், முதுகில் கைவைத்ததும் உடலை சிலிர்க்கும். இது சொரணையே இல்லாமலிருந்தது. அதனால் கண்டுபிடித்தேன்!' என்றான். சபாஷ்! தினமும் இவனுக்கு மூன்று பட்டை சோறுகொடுங்கள்! என்றான் ராஜா. பிறகு ஒரு நாள், குருடனிடம், தான் எப்படிப் பட்டவன் என்பதை சொல்லும்படிக் கேட்டான் ராஜா. 'மகாராஜா நான் சொல்வேன்! ஆனால்..நீங்கள் கோபப்படக்கூடாது...' என்றான் குருடன். ராஜாவும் சரி என்றான்.மகாராஜா நீங்கள் ஒரு சமையல் காரருக்கு பிறந்தவர்; ராஜாவுக்குப் பிறக்கவில்லை. கோபிக்ககூடாது!" என்றான் பயந்து கொண்டே. நேராக தன் தாயிடம் போய் விசாரித்தான் ராஜா. அரண்மனை சமையல்காரனுக்கு இவன் பிறந்ததாக தெரிந்து கொண்டான்.
குருடனிடம் வந்து 'உண்மை தான்! இதை நீ எப்படி தெரிந்து கொண்டாய்?' என்று கேட்டான் ராஜா. ஒ அதுவா! ராஜாவுக்குப் பிறந்து, ராஜவம்சத்தில் பிறந்தவன், பிறரைப் புகழ்ந்து பரிசளிப்பதானால், பொன்னைக் கொடு, பொருளைக் கொடு என்பான்; நீங்கள் எப்போது பார்த்தாலும்,
ஒரு பட்டை சோறு,இரண்டு பட்டை சோறு,மூன்று பட்டை சோறு' என்று பட்டை சோறாகவே பரிசளித்தீர்கள். சமையல்காரனுக்குத் தான் பட்டை சோறு ஞாபகம் வரும்; அதனால், நீங்கள் சமையல்காரன் மகனாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன்!' என்றான். ராஜாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குருடனுக்கு வெளியூரில் வசதியாக வாழ, வழி செய்து அனுப்பி வைத்தான்.
குலத்தையும், குடும்பத்தையும் பொருத்துத் தான் பிள்ளைகளும் இருப்பர்' என்பதைச் சொல்ல இப்படி ஒரு கதை உண்டு.ஒரு சில விதி விலக்கும் இருக்கலாம். அனுபவத்தில் கானவேண்டியவை இவை! பக்தியும், ஆசாரமும் உள்ள குடும்பத்தில் அதற்கேற்ற பிள்ளை!. தன்னுடைய ஊழ்வினைக்கேர்ப்பவே பிள்ளைகளும் அமையும்.

Saturday, 9 October 2010
ஆகாரத்தை குறையுங்கள். பகவானை நினையுங்கள்!
இந்தக் கலியுகத்தில், உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். மனிதனாகப் பிறந்தவன் குறிப்பிட்டகாலம் வரை வாழ்கிறான். அந்தக் காலத்தில் அவன் நற்காரியங்களையும், தெய்வ வழிபாட்டையும் சிரத்தையுடன் செய்து, சில தர்மங்களை அனுஷ்டித்து வந்தால் அதுவே மோட்ச சாதனம்.
அந்தக் காலத்தில் முனிவர்கள் காற்றையே புசித்து தவம் செய்தனர். அதன் பின்னர், சிலர் தயிர், தண்ணீர் இவைகளைப் புசித்தனர். பின்னர், காய், கிழங்கு, பழம் இவைகளைப் புசித்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு வந்தவர்கள், தானியங்கள், இலை, காய், பழம் இவைகளை புசித்தனர். அதன் பிறகு வந்தவர்கள், தானியங்களை வேக வைத்தும், சில தானியங்களை மாவாக்கியும், காய், கிழங்கு, இலை இவைகளையே வேக வைத்து, புசித்து நல்ல காரியங்களில் ஈடுபட்டனர். இவர்களெல்லாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆகாரத்தை அளவோடு உண்டு, பல காலம் திடமாக வாழ்ந்தவர்கள்.
காலப்போக்கில், நாகரீகம் வளர, வளர ஆகாரத்தின் வகைகளும், ருசியின் ஆசையும் அதிகமாயிற்று. ஒரு நாளைக்கு ஒரு வேளை என்றிருந்து போய், ஒரு நாளைக்கு இரண்டாகி, மூன்றாகி, நாலு, ஐந்து, ஆறு என்றாகியது. நம் பெரியோரும், யோகிகளும் உலகநன்மையை உத்தேசித்து உயிர் வாழ்வதற்காக சாபிட்டனர். இப்போது ஒரு சிலரைத் தவிர, எல்லாருமே சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ நினைகின்றனர்.
அந்தக் காலத்தில் நல்ல காரியம் செய்வதையே குறிகோளாக கொள்வர்; பசி, தாகம் எதையும் கவனிக்க மாட்டார்கள்.இப்போதெல்லாம் பசி தாங்கார், சதா சாப்பிட வேண்டும், இரவெல்லாம் கண்விழித்து, சினிமா, நாடகம், சூதாட்டம் இப்படிபட்டவைகளில் ஈடுபட்டு தீவினைகளை உண்டாக்கும் செயல்களிலேயே கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.பகவத் பக்தியிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபட்டால் ஆன்ம விடுதலைக்கு வழி பிறக்கும். கேளிக்கைகளிலும், சரீர சுகத்திலும் ஈடுபட்டால் விடுதலை எப்படி கிடைக்கும்?......... ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது,' என்ன சார்! சாப்டாச்சா? ' என்று கேட்டதும், அவர், ' ஒ! இப்பதான் ஆச்சு!' என்று சொல்வார். ' என்ன சார்! இன்னைக்கு கோவிலுக்குப் போயிருந்தீர்களா, ஜெபம் ஆயிற்றா?" என்று யாரும் விசாரிப்பதில்லை. அப்படிச் செய்ததாக யாரும் சொல்லுவதுமில்லை. இந்த சரீரமும், வாழ்கையும் சப்பாடுக்காகவே ஏற்பட்டதாக நினைகின்றனரோ! என்று தோன்றுகிறது.
நாயன்மார்களும், ஆழ்வார்களும், மகான்களும், பகவானைத் துதித்து,' பகவானே! உன்னை நினையாத நாட்களும், உன்னை துதிக்காத நாட்களுமே நான் பட்டினி கிடந்த நாட்களாகும்...' என்று உள்ளமுருகி பேசுகின்றனர். சாப்பாட்டை விட, இறைவனின் நினைப்பும், அவனது சேவையுமே உயர்ந்ததென்று கருதினர்; முக்தியும் பெற்றனர்.
ஆகாரத்தை குறையுங்கள். பகவானை நினையுங்கள். நிம்மதி கிடைக்கும். 'முக்திக்கும் வழி பிறக்கும்'.
Wednesday, 6 October 2010
Tuesday, 5 October 2010
பசித்தவர்க்கு உணவளியுங்கள்
* கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருட்ஜோதியாகத் திகழ்கிறார். தனிப்பெருங்கருணையோடு நம்மைக் காத்தருள்கிறார்.
* உயிர்க்கொலை செய்வதும், அவ்வுயிர்
களின் புலாலைப் புசிப்பதும் அறவே கூடாது.
* கண்ணில் காணும் உயிர்களை எல்லாம்
தன்னுயிராக மதித்து வாழ்வதே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும். இதை எல்லா மக்களும்
கடைபிடிக்க வேண்டும்.
* ஏழைகளின் பசிப்பிணி போக்குவதே ஜீவகாருண்யம். இந்த ஒழுக்கம் ஒன்றே பேரின்ப வீட்டின் திறவுகோல். பசித்த வயிறுக்கு உணவளித்தவன் பெரும்
புண்ணியத்தை அடைவான். நோய்நொடிகள் அவனை விட்டு விலகும். நீண்ட ஆயுள் உண்டாகும்.
* எதற்காகவும் கோபம் கொள்வதோ, பொய் சொல்வதோ, பிறர் நலன் கண்டு பொறாமை கொள்வதோ கூடாது.
உரத்துப்பேசுவது, விவாதம் செய்வது, வழக்கிடுவது, பிறரிடம் சண்டையிடுவது கூடாது.
* பதட்டம் கொள்வதால் பிராணவாயு அதிகமாகச்
செலவாகும். எனவே, எச்செயலையும் நிதானத்துடன் அணுகுவதே சிறந்தது.
வள்ளலார்
(இன்று வள்ளலார் அவதரித்த தினம்)

Tuesday, 28 September 2010
தனிமை!
மனித வாழ்க்கையில் கடமை என்று சொல்லப் படும் பல காரியங்களும், பொழுதுபோக்கு காரியங்களும் அடங்கும். பொழுது போக்காக செய்யும் காரியங்களால் பயன் ஏதுமிராது. கடமைக்காக செய்யும் காரியங்களில், குடும்பம், பந்துக்கள், நண்பர்கள் இவர்களுடைய மேம்பாட்டுக்காக செய்யப் படும் காரியங்கள் ஒரு வகை; தன்னுடைய மேம்பாட்டுக்காக செய்யும் காரியங்கள் மற்றொரு வகை.
இதிலும் தான் பெயரோடும், புகழோடும் வாழ வேண்டும், உன்னத நிலையிலிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படும் காரியங்கள் ஒரு வகை; தெய்வ சிந்தனை, வழிபாடு, பக்தி போன்றவற்றின் மூலமாக பிறவிப் பிணியை போக்குவதற்கான மார்க்கங்களில் ஈடுபட்டு, ஞானம் பெற்று, ஜென்மா கடைதேறுவதற்கு வேண்டிய காரியங்களை செய்வது இன்னொரு வகை. ஆனால், வாழ்க்கையில் மனிதன் கடைத்தேறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யாமல் அதாவது, எதைச் செய்தால் இந்தப் பிறவி பிணியை போக்கலாமோ அதைத் தள்ளிப் போடுகிறான்; அதை செய்யாமலே போய் விடுகிறான்.
ஆக, இந்த ஜென்மம் எடுத்ததற்கு என்ன பயன் என்றால், யார், யாருக்காகவோ பாடுபட்டு சம்பாதித்து விட்டு போய் விடுகிறான். இப்படி எத்தனை ஜென்மாவில் செய்து கொண்டிருப்பது...... விடிவு தான் எப்போது?
கடமையையும் செய்ய வேண்டும்; தான் உய்யும் வழியையும் தேட வேண்டும். இதற்கு, ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின், உடலில் சக்தி இருக்கும் போதே, பகவானை அடையும் வழியைத் தெரிந்து, அதன் வழி நடக்க வேண்டும். குடும்ப பந்தத்தில் தாமரை இலைத் தண்ணீர் போல பற்றும், படாமலும் இருக்க வேண்டும். இதற்கு சில வழிமுறைகளை சொல்லி இருகின்றனர். சித்த சுத்தியோடு, மனதை ஒருமுகப்படுத்தி, ஏகாந்தத்தில் அமர்ந்து , பகவானை நினைத்து, மந்திரங்களால் ஜெபித்து, அவனருள் பெற வேண்டும். இதில் ஏகாந்தம் என்பது ஒரு முக்கிய அம்சம். கடவுளைக் குறித்து தியானம் செய்வதற்கு, இடையூறுகள் இல்லாத தனியிடம் மிக அவசியம். இப்படி தனிமை ஏறப்பட்ட பிறகு தான் மனதை ஒருமுகப்படுத்துதல், புலனை அடக்குதல்,இதெல்லாம் சாத்தியமாகும்.
பகவானை வழிபட தபஸ் செய்வதற்காக காட்டுக்கு சென்றான் துருவன். அவனை சந்தித்தார் நாரதர். ' எங்கே போகிறாய்? எதற்காக போகிறாய்?' என்று கேட்டு விட்டு,' தபஸ் ரொம்ப சிரமமாயிற்றே, இதெல்லாம் உன்னால் முடியாது; வீட்டுக்கு போ!...' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், ' தவம் செய்து பகவானை தரிசிக்கப் போகிறேன்!..' என்று பிடிவாதமாக சொன்னான் துருவன். துருவன் தனிமையில் அமர்ந்து, புலன்களை அடக்கி, நாராயணின் மூல மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கவேண்டுமென்று சொல்லி, மூல மந்திரத்தையும் அவனுக்கு உபதேசித்தார், நாரதர். 'இனி, நீ, தவம் செய்ய ஆரம்பிக்கலாமே! .... என்றார் நாரதர்.
'அது சரி... நான் ஆரம்பிக்கிறேன், அதற்கு முன் நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போங்கள்!" என்றான் துருவன். 'ஏன், நான் இருந்தால் என்ன?' என்று கேட்டார் நாரதர். 'தவத்தை தனிமையில் செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் தானே உபதேசிதீர்கள். நீங்கள் இங்கு இருந்தால் எனக்கு தனிமை எப்படி ஏற்படும். என் மனமும், நீங்கள் என்ன செய்கரீர்கள் என்று என்பதை கவனிப்பதில் தானே இருக்கும். ஆகவே, தயவு செய்து தாங்கள் இந்த இடத்தை விட்டு நகருங்கள்! ' என்றான் துருவன்.நாரதருக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறுவனாக இருந்தாலும், விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறான் என்று மகிழ்ந்து அவனை ஆசிர்வதித்து சென்று விட்டார்.
தியானம், தவம் இவைகளுக்கு முக்கியமானவை தனிமை! இடம் கிடைப்பது தான் சிரமமாக இருக்கிறது.

Monday, 27 September 2010
துஷ்டனைக் கண்டால் தூர விலகு
குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார். துரியோதனன், அந்தப் பக்கமாக தேரில் வந்தான். தர்மர் நடந்து செல்வதைப் பார்த்து துரியோதனனுக்கு ரொம்ப ஆச்சரியம். அரசகுலத்தவன் ஏன் தெருவில் நடக்க வேண்டும்? இதுபற்றி அவன் தர்மரிடமே கேட்டு விட்டான். ""அண்ணா! நம்மைப் போன்றவர்கள் தெருவில் நடக்கலாமா? நம்மைப் பெற்றவர்கள் ஆளுக்கொரு தேர் தந்தும் நீ நடந்து செல்கிறாயே! இதில் ஏதேனும் விசேஷம் உண்டோ?'' என்றான்.தர்மர் அவனிடம்,""தம்பி! நாடாளப் போகிறவனுக்கு ஊர் நிலைமை தெளிவாகத் தெரிய வேண்டும். தேரில் போனால் வேகமாகப் போய்விடுவோம். ஒவ்வொரு தெருவாக நடந்தால் தான், நமது நாட்டின் நிலைமை, மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும்,'' என்றதும், துரியோதனனுக்கு உள்ளூர பொறாமை எழுந்தது.""நாடாளப் போவது நானல்லவா! அப்படிப் பார்த்தால் நானல்லவா நடந்து செல்ல வேண்டும், இவன் ஏன் நடக்கிறான்? சரி...சரி...இவனைப் போலவே நாமும் நடப்போம்,'' என தேரில் இருந்து குதித்தான்.மனதுக்குள் குதர்க்கம் இருந்தாலும், அண்ணனுடன் சேர்ந்து நல்லவன் போல் நடந்தான். அண்ணன் கவனித்த விஷயங்களையெல்லாம், இவனும் கவனித்துப் பார்த்தான்.ஓரிடத்தில் ஒரு ஆட்டிறைச்சிக்கடை இருந்தது. கடைக்காரன், ஒரு ஆட்டை அறுத்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தான். தர்மருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.""சே...இவனெல்லாம் ஒரு மனிதனா! இவனது காலில் ஒரு முள் குத்தினால் "ஆ'வென அலறுகிறான். ஆனால், இந்த ஆட்டின் கழுத்தைக் கத்தியைக் கொண்டு
கரகரவென நறுக்குகிறான். ஐயோ! அதன் அவலக்குரல் இவனது காதுகளில் விழத்தானே செய்கிறது! இரக்கம் என்பதே இவன் இதயத்தில் இல்லையா?' ' என்று அவனை மனதுக்குள் திட்டியபடியே நடந்தார்.
அப்போது, அந்தக் கடைக்காரன் இரண்டு இறைச்சித்துண்டுகளை எடுத்தான். தன் கடையின் கூரையில் எறிந்தான். தேவையற்ற எலும்புகளை அள்ளினான். தெருவில் நின்ற நாய்க்கு வீசி எறிந்தான். அது மகிழ்ச்சியோடு சாப்பிட்டது. கூரையில் எரிந்த துண்டுகளை ஏராளமான காகங்கள் கொத்தித் தின்றன.
""ஐயோ! தவறு செய்துவிட்டோமே! இவனது தொழில் ஆடு அறுப்பது என்றாலும், மிருகங்களின் மீது இவன் இரக்கம் இல்லாதவன் அல்ல. காகங்களுக்கும், நாய்க்கும் உணவிட்டதன் மூலம் இதற்குரிய பிராயச்சித்தத்தை தேடிக்கொள்வதோடு, தர்மத்தையும் பாதுகாக்கிறான். அப்படியானால், இவனைப் பற்றிய தப்பான அபிப்ராயம் என் மனதில் ஏன் ஏற்பட்டது? நான் கெட்டவனையும் கூட நல்லவனாகப் பார்ப்பவனாயிற்றே!'' என்று சிந்தித்தபடியே வீடு சென்றார்.நிஜத்தில் நடந்தது என்ன தெரியுமா?இவர் தனியாக நடந்து போயிருந்தால் இப்படிப்பட்ட எண்ணமே வந்திருக்காது. ஆனால், துரியோதனன் கூட வந்ததால் அவனது கெட்ட குணம் காற்றில் பரவி, தர்மரையும் பாதித்து விட்டது. இதனால் தான் "துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்றார்கள். துஷ்டனால் நமக்கு ஆபத்து வருகிறதோ இல்லையோ...அவர்களின் காற்றுப்பட்டால் நம் குணமும் மிருகநிலைக்கு சற்று நேரமாவது மாறி விடுமாம்! அதனால் தான் அப்படி ஒரு பழமொழியே வந்தது. இனியேனும், நல்லவர்களுடன் மட்டும் சேர்க்கை வைத்துக் கொள்வீர்கள் தானே!

Subscribe to:
Posts (Atom)