நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Friday, 2 July 2010

பாவத்தில் பங்கு


ஒரு மகரிஷி தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், அது என்ன ஏதென பார்க்காமல், அப்படியே விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை இடுவர். இதனால், தங்களுக்கு புண்ணியம் சேருமென அவர்கள் கருதினர். ஒருநாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்ட, அந்த மன்னன், அவரைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தின் ஒரு உருண்டையைப் போட்டான். மகரிஷியும் வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே போய்விட்டான். மறுநாள், ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள், என சொல்லிவிட்டு போய்விட்டார்.

மன்னன் நடுங்கி விட்டான். தானதர்மம் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கே தங்கினான். அங்கு தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை வரவழைத்து, அவளது திருமணத்திற்குரிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி ஒருமணி நேரம் அவர்களுக்கு எடுத்துக்கூறி அனுப்பி விடுவான். இதை அவ்வூரில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டினர். மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்,என்றனர். இப்படியாக பல பல விமர்சனங்கள். ஒருநாள், பார்வையற்ற தன் கணவரை அழைத்து வந்த ஒரு கற்புக்கரசி, அரசரின் குடிலின் முன்பு நின்று பிச்சை கேட்டாள். அந்த கணவன், நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்? எனக் கேட்டார். அரசன் வீட்டு முன்பு, என்றாள் அந்தப் பெண்.

ஓ! தானம் கொடுப்பதாகச்சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா? என்றார் அந்த பார்வையற்றவர். அந்தப்பெண் அவரது வாயைப் பொத்தினாள். அன்பரே! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்ணுவதற்காக தயாரானது. அவ்விஷயம் இவனுக்குத் தெரிய வரவே, இவன் கன்னியர்க்கு தானதர்மம் செய்து, நற்போதனைகளைச் செய்தான். ஆனால், இவனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாணமலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. இவனைப் பற்றி தவறுதலாகப் பேசி, அதை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அடுத்த பிறவியிலும் பார்வையற்றே பிறப்பீர்கள், என்றாள்.தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.

Tuesday, 29 June 2010

நீங்கள் முக்தி பெற வேண்டுமா?



மனிதனாக பிறந்தவர்களின் ஆசை, முக்தி பெற வேண்டும் என்பதுதான். அனால், இந்த முக்தி ஒரு சிலருக்கு தான் கிடைகிறது. சில ஷேத்திரங்கள், 'முக்தி ஸ்தலம்' என்று சொல்லப்பட்டுள்ளது. கமலையில்(திருவாரூரில்) பிறந்தால், முக்தி; சிதம்பரத்தை(நடராஜரை) தரிசித்தால், முக்தி; திருவண்ணாமலையை நினைத்தாலே, முக்தி; காசியில் இறந்தால், முக்திஎன்றெல்லாம் கூறுகின்றனர்.

இதில், கமலையில் பிறப்பது அவன் கையில் இல்லை; அது, அவன் தாயாரின் விருப்பத்தைபொறுத்தது; அடுத்து, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. எத்தனையோ தடவை, சிதம்பரம்வழியாகப் போவர்; அனால், இறங்கி நடராஜா தரிசனம் செய்ய நேரமிராது; அடுத்தது, ரொம்பசுலபம். அண்ணாமலையை நினைத்தாலே போதும், முக்தி கிடைக்குமாம்; எவ்வளவோதேவைகள், தொல்லைகள். அருணாச்சலத்தை, அதான் திருவண்ணாமலை யாரை நினைக்கநேரமிராது.

அடுத்தது, காசியில் மரிப்பவர்க்கு முக்தி; அனால், அது எல்லார்க்கும் கிடைத்துவிடாது. காசியில்மரிக்க வேண்டிய புண்ணியம் உள்ளவர்களை அழைத்து வரவும், புண்ணியமில்லாதவர்களைவரவிடாமல் தடுத்தும், அப்படி யாரவது தங்கியிருந்தாலும், அவர்களை வெளியூருக்கு கிளப்பிவிடவும் தனித்தனியாக பூத கணங்களை அங்கே பகவான் வைத்திருப்பாராம்.

புண்ணியமில்லாதவன், காசிக்குப் போகிறேன் என்று எத்தனை முறை புறப்பட்டாலும் போகமுடியாது; அதே போல், புண்ணியமில்லாதவன் அங்கிருந்தாலும் கடைசி காலத்தில் அங்கு மரிக்கமுடியாது. புண்ணியமுல்லவன் அங்கே இருந்தால், அது பாக்கியம், அல்லது அவன் வேறுஎங்கேயாவது இருந்தாலும் மரணகாலத்தில் அவன் அங்கே வந்து சேர்ந்து விடுவான். இது , எறும்பு முதல் எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும். காசியிலுள்ள அனைத்து ஜீவன்களுக்கு முக்தி!

காசி செல்ல ஏற்பாடு செய்கிறாள் ஒரு பாட்டியம்மா, எத்தனையோ சாமான்களை சேகரம் செய்துவைத்துக் கொள்கிறாள். கூடவே, ஒரு டின் நிறைய முறுக்கு எடுத்துக் கொள்கிறாள். காசியல் போய்டின்னை திறந்து பார்க்கிறாள். அதுக்குள் கட்டெறும்பு ஒன்று முழித்து முழித்து பார்க்கிறது. 'அடச்சீ...... கட்டெறும்பு வந்துடுத்தே'.., என்று சொல்லி,எறும்பை எடுத்து கீழே தரையில் போட்டுகாலால் மர்த்தனம் செய்கிறாள்.

கட்டெறும்பு புண்ணியம் செய்திருந்தது. டிக்கெட், கூட வாங்காமல், சாப்பாட்டுச் செலவும்இல்லாமல், காசியில் மரணம்; முக்தி! இது எல்லோருக்கும் கிடைத்து விடாது.அங்கே யாரவதுமரணமடைந்தால், அழ மாட்டார்கள்; காசி விஸ்வநாதன் அழைத்து கொண்டான்' என்பார்கள். இறந்தவனுடைய அஸ்தியில்( எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போடவேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணிய லோக வாசம் கிடைக்கும். நம் பாரதத்தில் எத்தனையோ ஷேத்திரங்கள், புண்ணிய நதிகள் என மனிதன் நற்கதி பெற பல மார்க்கங்கள் உள்ளன. இவைகளிலும் நான்கவனம் செலுத்த வேண்டும்.

Friday, 25 June 2010

பிறருக்கு கொடுத்து உதவுங்கள்!



'மிகுந்த புண்ணியங்களை விலையாக கொடுத்து, இந்த, மனித சரீரமாகிய ஓடம் வாங்கப்பட்டுள்ளது, இது உடைந்து போவதற்குள் பிறவிக் கடலை தாண்டி, அக்கரை போய்ச் சேர்' என்று ஒரு மகான் கூறுகிறார். மனிதப்பிறவி கிடைத்தும், ஞானம் பெறாதவர்கள், பசுவாகவோ, இதர பிராணிகளாகவோ இருந்திருக்கலாமே!

ஏனெனில், மனிதர்களுக்குத் தான் சாஸ்திரம், சம்பிரதாயம், பாவம், புண்ணியம், செய்ய தகுந்தவை, செய்ய தகாதவை, என்றெல்லாம் உள்ளது; பிராணிகளுக்கு இதெல்லாம் கிடையாது; அதனால், சாஸ்திர சம்பிரதங்களை அனுசரித்து நடவாத மனிதன் மிருகமாகவே இருந்திருக்கலாமே! என்றார் அவர். பணம், பொருள் மேல் தீராத ஆசை மனிதனுக்கு. நிறைய சம்பாதிக்க வேண்டும், நிறைய சேர்த்து வைக்க வேண்டும்! இதற்காக ஓய்வில்லாமல் ஓடித் திரிவதும், கவலைப்படுது மாகவே காலம் கழிகிறது; சம்பாதித்து போதும்,. சேர்த்து வைத்தது போதும் என்றுஎத்தனை பேர் சொல்லி இருக்கிறார்கள்?

பணம் சேரச் சேர ஆனந்தம், ஒன்றுக்கு பக்கத்தில் எத்தனை பூஜ்யம் இருந்தாலும், 'இன்னும் ஒரு பூஜ்யம் சேர வேண்டும்' என்று ஆசை. கடைசியில் இவன் கொண்டு போவது ஒரே ஒரு பெரிய பூஜ்யம்' தான். அனால், அதை பற்றி இப்போது கவலைபடுவதில்லை! இவன் நிறைய சேர்க்கச் சேர்க்க, இவனது வயது ஏற ஏற, மற்ற பந்து மித்தரர்கள் இவனையே கவனிக்க ஆரம்பித்து விடுக்கின்றனர்.

பொருள், பணம் சேர்க்க வேண்டியது தான்: இருக்கும் போதே தேவை உள்ளவர்களுக்கு கொடுத்தால், அவர்களும் பயன்பெற்று சந்தோசமடைவார்கள்; தனக்கும் திருப்தியும், மன மகிழ்ச்சியும் ஏற்படும்.நாம் போன பிறகு இவ்வளவும் யார் எடுத்து கொள்வாரோ!என்ற மனகவலையுடன், சாந்தியில்லாமல் போகவேண்டாமே!

நிறைய சம்பாதித்தான், எல்லாருக்கும் கொடுத்தான், புண்ணியவான்! அவனுக்கு நல்ல கதி கிடைக்கட்டும்...' என்று உற்றாரும், சுற்றாரும் சொல்லவேண்டாமா?. பணம் படைத்தவன் ஏழ்மை நிலையில் உள்ள சுற்றத்தார்க்கு உதவி செய்யாவிடில், அது பெரிய பாவம் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
சாஸ்திரம் பெரிதா, தர்மம் பெரிதா? சிந்திக்க வேண்டும். இப்போது கொடுப்பது பல மடங்காக பிறஜென்மங்களில் வரும், வந்தே தீரும். கொடுக்க மனம் வர வேண்டும், கை வர வேண்டும். இரண்டும் இருந்தால், போதும்!

Sunday, 20 June 2010

தர்ம சிந்தனை வேண்டும்!


"மேதினியிலிட்டார் பெரியோர், இடாதா ரிழி குலத்தோர்...' என்று இரண்டே ஜாதிகள்தான் என்றனர். தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் முக்கியத்துவத்துக்காக சொல்லப்பட்ட பாடல் வரி இது.

இருப்பவன், இல்லாதவனுக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பது, பெரியோர் கொள்கை; ஆனால், எல்லாருக்குமே மனசு வருகிறதா? கையில் 99 ரூபாய் இருந்தால், அத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து, நூறு ரூபாயாக பிக்சட் டிபாசிட்டில் போடத்தான் ஆசைப்படுகிறான். இப்படி, நிறைய பொருளிருந்தும், இல்லாதவருக்குக் கொடாதவன் என்ன நிலையை அடைகிறான் என்பதற்கு, ஒரு பாடல் இருக்கிறது.

"மண்ணாஞ் சட்டி கரத்தேந்தி மர நாய் கவ்வுங்காலினராய், அண்ணாந்த் தேங்கியிருப்பாரையறிந்தோ மறிந் தோமம்மா, பண்ணார் மொழியார் பாலடிசில் பைம் பொற்காலத்தில் பரிந்தூட்ட, உண்ணா நின்ற போதொருவர்க் குதவா மாந்தரிவர் தாமே!'
"கையில் மண் சட்டியேந்தி, மர நாய் கவ்வும் அளவுக்கு வியாதியுள்ள கால்களைக் கொண்டு, எங்கு சோறு கிடைக்குமோ என்று ஏங்கி அலைந்து கொண்டிருப்பவர்களைக் கண்டோம், கண்டோம்.

"அவர்கள் யாரெனில், தேன்மொழி பேசும் மங்கையர்கள், பொன் கலத்தில் பாலோடு கலந்த அன்னத்தை மிக அன்போடு ஊட்ட, அதை ரசித்து உண்ணும் சமயம், "ஐயா பசி!' என்று வந்தவனுக்கு ஒன்றும் கொடாதவர்கள் தான்!' என்றனர்!

இப்படியெல்லாம் அநீதிகளைச் சொல்லியிருக்கின்றனர். அதாவது, சமுதாயத்தில் தானே சாப்பிட்டு, எல்லா சுகங்களையும், தானே அனுபவிக்காமல், ஏழைகளையும் கொஞ்சமாவது கவனிக்க வேண்டும். விதி வசத்தால் அவன் ஏழையாகவோ, பிச்சைக்காரனாகவோ வந்து நிற்கிறான். முடிந்த அளவு தர்மம் செய்ய வேண்டும்.

தர்மம் என்பதில் கண்ணை மூடி, வாரி வழங்க வேண்டுமென்பதில்லை. ஏதோ கொஞ்சம் போதுமே... தர்ம சிந்தை இருந்தாலே நல்லது தானே! "சம்பாதிப்பதில் ஆறில் ஒரு பங்கை, தர்மம் செய்!' என்றனர். தற்காலத்தில், அவ்வளவு செய்ய முடியாது; மனசும் வராது. ஏதோ ஓரளவு செய்தாலும் போதும். பணம், பொருள் எல்லாமே தெய்வானுக்கிரகத்தால் கிடைப்பது தானே!

பஸ்சில் போனவன், மாருதி காரில் போகிறான்; மாருதி காரில் போனவன் பஸ் ஸ்டாண்டில் நிற்கிறான். பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். அதனால், உள்ளபோதே ஏதாவது தர்மம், நல்ல காரியம் செய்துவிடு! நாளைய நிலை என்னவோ... யார் கண்டது?

பிறருக்குக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது. "ஒரு பங்கு தர்மம் செய்தால், பத்து பங்கு அதுவாகத் திரும்ப வரும்...' என்று சொன்னார்கள். கொடுத்துப் பார்த்தால் தானே தெரியும்! வருமோ, வராதோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்தால் எப்படி? கொடுத்துதான் பார்க்கலாமே... முயன்று தான் பாருங்களேன்!
- வைரம் ராஜகோபால்

Friday, 18 June 2010

சாப்பிடும் பொழுது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்.


கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்
இயற்றிய
ஆசாரக்கோவை லிருந்து
  • நீராடி, காலைக் கழுவி, வாய் துடைத்து, உண் கலத்தை சுற்றி, நீரிரைத்து உண்பவரே உண்பார். இப்படி செய்யாமல் உண்டாரைப் போல் வாயை கழுவி போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொள்வார்.
  • கால் கழுவின ஈரம் உலர்வதற்கு முன்னே உணவு உண்ண வேண்டும். கால் ஈரம் உலர்ந்த பிறகே படுக்கைக்கு செல்ல வேண்டும். இதுவே அறிவாளர்களின் கொள்கையாகும்.
  • ஒருவன் உண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து, தூங்காமல், அசையாமல், வேறொன்றினையும் பார்க்காமல், பேசாமல், உண்கின்ற உணவை கையாலெடுத்து சிந்தாமல் நன்றாக உண்ண வேண்டும்.
  • நல்லொழுக்கத்தினின்று தவறாத பெரியோர்கள், விருந்தினர்க்கும், மூத்தோர்களுக்கும், பசுக்களுக்கும், பறவைகளுக்கும், பிள்ளைகளுக்கும் உணவு அளிக்காமல் தான் உண்ணமாட்டார்.
  • கிழக்கு திசையும், ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் மற்ற திசைகளும் நல்லவைகளாகும். உச்சிப் பொழுதில் உண்ணுதல் நலம்.
  • படுத்தோ, நின்றோ, வெளியிடத்தில் நின்றோ உண்ணல் ஆகாது. விரும்பி மிகுதியாக உண்ணலும் ஆகாது. கட்டில் மேலிருந்து உண்ணுதல் கூடாது.
  • தம்மிலும் பெரியாருடன் உண்ணும்போது அவர்க்கு முன்னே தாம் உண்ண மாட்டார். முந்தி எழுந்திருக்க மாட்டார். அவரை நெருங்கி அமர்ந்து உண்ணமாட்டார். எல்லா செல்வமும் பெறுவதாயினும் வலப்புறம் அமர்ந்து உண்ணார்.
  • உணவை உண்ணும்போது கசப்பானவைகளை கடைசியிலும் தித்திப்பான பண்டங்களை முதலாகவும் மற்றவைகளை இடையிலும் உண்ண வேண்டும்.
  • வாயை நன்றாக கொப்புளித்து, நன்றாக துடைத்து, முக்குடி குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும்.

Friday, 11 June 2010

பிரணாயாமம் எப்படி யோகத்திற்கு உதவுகிறது?

சுவாசத்தை
  1. ஓரங்குலம் உள்ளே அடக்கினால் உலகப்பற்று நீங்கும்.
  2. இரண்டங்குலம் உள்ளே அடக்கினால் ஆனந்தம் உண்டாகும்.
  3. மூன்றங்குலம் உள்ளே அடக்கினால் கவிபாடும் வல்லமை உண்டாகும்.
  4. நான்கு அங்குலம் உள்ளே அடக்கினால் வாக்கு சித்தி உண்டாகும்.
  5. ஐந்து அங்குலம் உள்ளே அடக்கினால் முக்கால ஞானம் உண்டாகும்.
  6. ஆறு அங்குலம் உள்ளே அடக்கினால் கணம் குறைந்து மேலெழும் சக்தி ஏற்படும்.
  7. ஏழு அங்குலம் உள்ளே அடக்கினால் வாயுவேக சக்தி உண்டாகும்.
  8. எட்டு அங்குலம் உள்ளே அடக்கினால் அஷ்டமா சித்திகளை பெறலாம்.
  9. ஒன்பதன்குலம் உள்ளே அடக்கினால் நவ நிதிகளை பெறலாம்.
  10. பத்தங்குலம் உள்ளே அடக்கினால் பத்து உருவங்கள் எடுக்கும் ஆற்றல் உண்டாகும்.
  11. பதினோரு அங்குலம் உள்ளே அடக்கினால் நிழல் இன்றி உலகில் உலாவலாம்.
  12. பனிரெண்டு அங்குலம் உள்ளே அடக்கினால் பிரமரந்திரத்தில் அடங்கும் போது அமுதம் கிடைகிறது.

Tuesday, 8 June 2010

எது முக்கியம்?

"சாமநாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை வீட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பனெங்கள் ஈசனே".
- சிவவாக்கியர்.

ஆசை வலைக்குள் சிக்கி அகப்பட்டுகிடக்கும் மாந்தர், சாத்திர தோத்திரங்களை ஓதுவதால் மட்டும் எவ்விதப் பயனுமில்லை என்கிறார். காம இச்சைகளை விட்டு நீங்கும் நெஞ்சில், இறைவன் முந்தி வந்துறைகிறான், என்கிறார். அதுமட்டுமில்லாது, இறைவழிபாடிர்க்காக சிலர் செய்யும் அறியாமைச் செயல்களைத் தன்னில்வலப் படுத்திக் கொண்டு எள்ளி நகையாடுகிறார்.