நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Saturday 9 October, 2010

ஆகாரத்தை குறையுங்கள். பகவானை நினையுங்கள்!


இந்தக் கலியுகத்தில், உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். மனிதனாகப் பிறந்தவன் குறிப்பிட்டகாலம் வரை வாழ்கிறான். அந்தக் காலத்தில் அவன் நற்காரியங்களையும், தெய்வ வழிபாட்டையும் சிரத்தையுடன்  செய்து, சில தர்மங்களை அனுஷ்டித்து வந்தால் அதுவே மோட்ச சாதனம்.
அந்தக் காலத்தில் முனிவர்கள் காற்றையே புசித்து தவம் செய்தனர். அதன் பின்னர், சிலர் தயிர், தண்ணீர் இவைகளைப் புசித்தனர். பின்னர், காய், கிழங்கு, பழம் இவைகளைப் புசித்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு வந்தவர்கள், தானியங்கள், இலை, காய், பழம் இவைகளை புசித்தனர். அதன் பிறகு வந்தவர்கள், தானியங்களை வேக வைத்தும், சில தானியங்களை மாவாக்கியும், காய், கிழங்கு, இலை இவைகளையே வேக வைத்து, புசித்து நல்ல காரியங்களில் ஈடுபட்டனர். இவர்களெல்லாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆகாரத்தை அளவோடு உண்டு, பல காலம் திடமாக வாழ்ந்தவர்கள்.
                                  காலப்போக்கில், நாகரீகம் வளர, வளர ஆகாரத்தின் வகைகளும், ருசியின் ஆசையும் அதிகமாயிற்று. ஒரு நாளைக்கு ஒரு வேளை என்றிருந்து போய், ஒரு நாளைக்கு இரண்டாகி, மூன்றாகி, நாலு, ஐந்து, ஆறு என்றாகியது. நம் பெரியோரும், யோகிகளும் உலகநன்மையை உத்தேசித்து  உயிர் வாழ்வதற்காக சாபிட்டனர். இப்போது ஒரு சிலரைத் தவிர, எல்லாருமே சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ நினைகின்றனர்.
                 
அந்தக் காலத்தில் நல்ல காரியம் செய்வதையே குறிகோளாக கொள்வர்; பசி, தாகம் எதையும் கவனிக்க மாட்டார்கள்.இப்போதெல்லாம் பசி தாங்கார், சதா சாப்பிட வேண்டும், இரவெல்லாம் கண்விழித்து, சினிமா, நாடகம், சூதாட்டம் இப்படிபட்டவைகளில் ஈடுபட்டு தீவினைகளை உண்டாக்கும் செயல்களிலேயே கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.
                                பகவத் பக்தியிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபட்டால் ஆன்ம விடுதலைக்கு வழி பிறக்கும்.  கேளிக்கைகளிலும், சரீர சுகத்திலும் ஈடுபட்டால் விடுதலை எப்படி கிடைக்கும்?......... ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது,' என்ன சார்! சாப்டாச்சா? ' என்று கேட்டதும், அவர், ' ஒ! இப்பதான் ஆச்சு!' என்று சொல்வார். ' என்ன சார்! இன்னைக்கு கோவிலுக்குப் போயிருந்தீர்களா, ஜெபம் ஆயிற்றா?" என்று யாரும் விசாரிப்பதில்லை. அப்படிச் செய்ததாக யாரும் சொல்லுவதுமில்லை. இந்த சரீரமும், வாழ்கையும் சப்பாடுக்காகவே ஏற்பட்டதாக நினைகின்றனரோ! என்று தோன்றுகிறது.
                                      
                                                  நாயன்மார்களும், ஆழ்வார்களும், மகான்களும், பகவானைத் துதித்து,' பகவானே! உன்னை நினையாத  நாட்களும், உன்னை துதிக்காத நாட்களுமே நான் பட்டினி கிடந்த நாட்களாகும்...' என்று உள்ளமுருகி பேசுகின்றனர். சாப்பாட்டை விட, இறைவனின்  நினைப்பும், அவனது சேவையுமே உயர்ந்ததென்று கருதினர்; முக்தியும் பெற்றனர்.
ஆகாரத்தை குறையுங்கள். பகவானை நினையுங்கள். நிம்மதி கிடைக்கும். 'முக்திக்கும் வழி பிறக்கும்'.

5 comments:

வந்தியதேவன்.. said...

தமிழ்மணத்துல இணைங்க வோட் போடனும்ல..

Asiya Omar said...

எங்கேயோ போயிட்டீங்க தம்பி.

jagadeesh said...

அக்கா, உங்க சமையல் சாப்பிடறவங்களுக்கு இது பொருந்தாது.

Chitra said...

ஜெகதீஷ், எப்படி இருக்கீங்க? சாப்பிட்டாச்சா?

சாரி..... சாரி.... உங்கள் ஆன்மா எப்படி இருக்கிறது? கோயிலுக்கு போய் பூஜை/ஜெபம் எல்லாம் பண்ணியாச்சா?

jagadeesh said...

வாங்க சித்ரா:
கருத்தை கனகச்சிதமாய் பிடித்துவிட்டீர்களே!
வருக்கைக்கு நன்றி.

Post a Comment