நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Tuesday, 29 June, 2010

நீங்கள் முக்தி பெற வேண்டுமா?மனிதனாக பிறந்தவர்களின் ஆசை, முக்தி பெற வேண்டும் என்பதுதான். அனால், இந்த முக்தி ஒரு சிலருக்கு தான் கிடைகிறது. சில ஷேத்திரங்கள், 'முக்தி ஸ்தலம்' என்று சொல்லப்பட்டுள்ளது. கமலையில்(திருவாரூரில்) பிறந்தால், முக்தி; சிதம்பரத்தை(நடராஜரை) தரிசித்தால், முக்தி; திருவண்ணாமலையை நினைத்தாலே, முக்தி; காசியில் இறந்தால், முக்திஎன்றெல்லாம் கூறுகின்றனர்.

இதில், கமலையில் பிறப்பது அவன் கையில் இல்லை; அது, அவன் தாயாரின் விருப்பத்தைபொறுத்தது; அடுத்து, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. எத்தனையோ தடவை, சிதம்பரம்வழியாகப் போவர்; அனால், இறங்கி நடராஜா தரிசனம் செய்ய நேரமிராது; அடுத்தது, ரொம்பசுலபம். அண்ணாமலையை நினைத்தாலே போதும், முக்தி கிடைக்குமாம்; எவ்வளவோதேவைகள், தொல்லைகள். அருணாச்சலத்தை, அதான் திருவண்ணாமலை யாரை நினைக்கநேரமிராது.

அடுத்தது, காசியில் மரிப்பவர்க்கு முக்தி; அனால், அது எல்லார்க்கும் கிடைத்துவிடாது. காசியில்மரிக்க வேண்டிய புண்ணியம் உள்ளவர்களை அழைத்து வரவும், புண்ணியமில்லாதவர்களைவரவிடாமல் தடுத்தும், அப்படி யாரவது தங்கியிருந்தாலும், அவர்களை வெளியூருக்கு கிளப்பிவிடவும் தனித்தனியாக பூத கணங்களை அங்கே பகவான் வைத்திருப்பாராம்.

புண்ணியமில்லாதவன், காசிக்குப் போகிறேன் என்று எத்தனை முறை புறப்பட்டாலும் போகமுடியாது; அதே போல், புண்ணியமில்லாதவன் அங்கிருந்தாலும் கடைசி காலத்தில் அங்கு மரிக்கமுடியாது. புண்ணியமுல்லவன் அங்கே இருந்தால், அது பாக்கியம், அல்லது அவன் வேறுஎங்கேயாவது இருந்தாலும் மரணகாலத்தில் அவன் அங்கே வந்து சேர்ந்து விடுவான். இது , எறும்பு முதல் எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும். காசியிலுள்ள அனைத்து ஜீவன்களுக்கு முக்தி!

காசி செல்ல ஏற்பாடு செய்கிறாள் ஒரு பாட்டியம்மா, எத்தனையோ சாமான்களை சேகரம் செய்துவைத்துக் கொள்கிறாள். கூடவே, ஒரு டின் நிறைய முறுக்கு எடுத்துக் கொள்கிறாள். காசியல் போய்டின்னை திறந்து பார்க்கிறாள். அதுக்குள் கட்டெறும்பு ஒன்று முழித்து முழித்து பார்க்கிறது. 'அடச்சீ...... கட்டெறும்பு வந்துடுத்தே'.., என்று சொல்லி,எறும்பை எடுத்து கீழே தரையில் போட்டுகாலால் மர்த்தனம் செய்கிறாள்.

கட்டெறும்பு புண்ணியம் செய்திருந்தது. டிக்கெட், கூட வாங்காமல், சாப்பாட்டுச் செலவும்இல்லாமல், காசியில் மரணம்; முக்தி! இது எல்லோருக்கும் கிடைத்து விடாது.அங்கே யாரவதுமரணமடைந்தால், அழ மாட்டார்கள்; காசி விஸ்வநாதன் அழைத்து கொண்டான்' என்பார்கள். இறந்தவனுடைய அஸ்தியில்( எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போடவேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணிய லோக வாசம் கிடைக்கும். நம் பாரதத்தில் எத்தனையோ ஷேத்திரங்கள், புண்ணிய நதிகள் என மனிதன் நற்கதி பெற பல மார்க்கங்கள் உள்ளன. இவைகளிலும் நான்கவனம் செலுத்த வேண்டும்.

Friday, 25 June, 2010

பிறருக்கு கொடுத்து உதவுங்கள்!'மிகுந்த புண்ணியங்களை விலையாக கொடுத்து, இந்த, மனித சரீரமாகிய ஓடம் வாங்கப்பட்டுள்ளது, இது உடைந்து போவதற்குள் பிறவிக் கடலை தாண்டி, அக்கரை போய்ச் சேர்' என்று ஒரு மகான் கூறுகிறார். மனிதப்பிறவி கிடைத்தும், ஞானம் பெறாதவர்கள், பசுவாகவோ, இதர பிராணிகளாகவோ இருந்திருக்கலாமே!

ஏனெனில், மனிதர்களுக்குத் தான் சாஸ்திரம், சம்பிரதாயம், பாவம், புண்ணியம், செய்ய தகுந்தவை, செய்ய தகாதவை, என்றெல்லாம் உள்ளது; பிராணிகளுக்கு இதெல்லாம் கிடையாது; அதனால், சாஸ்திர சம்பிரதங்களை அனுசரித்து நடவாத மனிதன் மிருகமாகவே இருந்திருக்கலாமே! என்றார் அவர். பணம், பொருள் மேல் தீராத ஆசை மனிதனுக்கு. நிறைய சம்பாதிக்க வேண்டும், நிறைய சேர்த்து வைக்க வேண்டும்! இதற்காக ஓய்வில்லாமல் ஓடித் திரிவதும், கவலைப்படுது மாகவே காலம் கழிகிறது; சம்பாதித்து போதும்,. சேர்த்து வைத்தது போதும் என்றுஎத்தனை பேர் சொல்லி இருக்கிறார்கள்?

பணம் சேரச் சேர ஆனந்தம், ஒன்றுக்கு பக்கத்தில் எத்தனை பூஜ்யம் இருந்தாலும், 'இன்னும் ஒரு பூஜ்யம் சேர வேண்டும்' என்று ஆசை. கடைசியில் இவன் கொண்டு போவது ஒரே ஒரு பெரிய பூஜ்யம்' தான். அனால், அதை பற்றி இப்போது கவலைபடுவதில்லை! இவன் நிறைய சேர்க்கச் சேர்க்க, இவனது வயது ஏற ஏற, மற்ற பந்து மித்தரர்கள் இவனையே கவனிக்க ஆரம்பித்து விடுக்கின்றனர்.

பொருள், பணம் சேர்க்க வேண்டியது தான்: இருக்கும் போதே தேவை உள்ளவர்களுக்கு கொடுத்தால், அவர்களும் பயன்பெற்று சந்தோசமடைவார்கள்; தனக்கும் திருப்தியும், மன மகிழ்ச்சியும் ஏற்படும்.நாம் போன பிறகு இவ்வளவும் யார் எடுத்து கொள்வாரோ!என்ற மனகவலையுடன், சாந்தியில்லாமல் போகவேண்டாமே!

நிறைய சம்பாதித்தான், எல்லாருக்கும் கொடுத்தான், புண்ணியவான்! அவனுக்கு நல்ல கதி கிடைக்கட்டும்...' என்று உற்றாரும், சுற்றாரும் சொல்லவேண்டாமா?. பணம் படைத்தவன் ஏழ்மை நிலையில் உள்ள சுற்றத்தார்க்கு உதவி செய்யாவிடில், அது பெரிய பாவம் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
சாஸ்திரம் பெரிதா, தர்மம் பெரிதா? சிந்திக்க வேண்டும். இப்போது கொடுப்பது பல மடங்காக பிறஜென்மங்களில் வரும், வந்தே தீரும். கொடுக்க மனம் வர வேண்டும், கை வர வேண்டும். இரண்டும் இருந்தால், போதும்!

Sunday, 20 June, 2010

தர்ம சிந்தனை வேண்டும்!


"மேதினியிலிட்டார் பெரியோர், இடாதா ரிழி குலத்தோர்...' என்று இரண்டே ஜாதிகள்தான் என்றனர். தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் முக்கியத்துவத்துக்காக சொல்லப்பட்ட பாடல் வரி இது.

இருப்பவன், இல்லாதவனுக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பது, பெரியோர் கொள்கை; ஆனால், எல்லாருக்குமே மனசு வருகிறதா? கையில் 99 ரூபாய் இருந்தால், அத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து, நூறு ரூபாயாக பிக்சட் டிபாசிட்டில் போடத்தான் ஆசைப்படுகிறான். இப்படி, நிறைய பொருளிருந்தும், இல்லாதவருக்குக் கொடாதவன் என்ன நிலையை அடைகிறான் என்பதற்கு, ஒரு பாடல் இருக்கிறது.

"மண்ணாஞ் சட்டி கரத்தேந்தி மர நாய் கவ்வுங்காலினராய், அண்ணாந்த் தேங்கியிருப்பாரையறிந்தோ மறிந் தோமம்மா, பண்ணார் மொழியார் பாலடிசில் பைம் பொற்காலத்தில் பரிந்தூட்ட, உண்ணா நின்ற போதொருவர்க் குதவா மாந்தரிவர் தாமே!'
"கையில் மண் சட்டியேந்தி, மர நாய் கவ்வும் அளவுக்கு வியாதியுள்ள கால்களைக் கொண்டு, எங்கு சோறு கிடைக்குமோ என்று ஏங்கி அலைந்து கொண்டிருப்பவர்களைக் கண்டோம், கண்டோம்.

"அவர்கள் யாரெனில், தேன்மொழி பேசும் மங்கையர்கள், பொன் கலத்தில் பாலோடு கலந்த அன்னத்தை மிக அன்போடு ஊட்ட, அதை ரசித்து உண்ணும் சமயம், "ஐயா பசி!' என்று வந்தவனுக்கு ஒன்றும் கொடாதவர்கள் தான்!' என்றனர்!

இப்படியெல்லாம் அநீதிகளைச் சொல்லியிருக்கின்றனர். அதாவது, சமுதாயத்தில் தானே சாப்பிட்டு, எல்லா சுகங்களையும், தானே அனுபவிக்காமல், ஏழைகளையும் கொஞ்சமாவது கவனிக்க வேண்டும். விதி வசத்தால் அவன் ஏழையாகவோ, பிச்சைக்காரனாகவோ வந்து நிற்கிறான். முடிந்த அளவு தர்மம் செய்ய வேண்டும்.

தர்மம் என்பதில் கண்ணை மூடி, வாரி வழங்க வேண்டுமென்பதில்லை. ஏதோ கொஞ்சம் போதுமே... தர்ம சிந்தை இருந்தாலே நல்லது தானே! "சம்பாதிப்பதில் ஆறில் ஒரு பங்கை, தர்மம் செய்!' என்றனர். தற்காலத்தில், அவ்வளவு செய்ய முடியாது; மனசும் வராது. ஏதோ ஓரளவு செய்தாலும் போதும். பணம், பொருள் எல்லாமே தெய்வானுக்கிரகத்தால் கிடைப்பது தானே!

பஸ்சில் போனவன், மாருதி காரில் போகிறான்; மாருதி காரில் போனவன் பஸ் ஸ்டாண்டில் நிற்கிறான். பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். அதனால், உள்ளபோதே ஏதாவது தர்மம், நல்ல காரியம் செய்துவிடு! நாளைய நிலை என்னவோ... யார் கண்டது?

பிறருக்குக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது. "ஒரு பங்கு தர்மம் செய்தால், பத்து பங்கு அதுவாகத் திரும்ப வரும்...' என்று சொன்னார்கள். கொடுத்துப் பார்த்தால் தானே தெரியும்! வருமோ, வராதோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்தால் எப்படி? கொடுத்துதான் பார்க்கலாமே... முயன்று தான் பாருங்களேன்!
- வைரம் ராஜகோபால்

Friday, 18 June, 2010

சாப்பிடும் பொழுது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்.


கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்
இயற்றிய
ஆசாரக்கோவை லிருந்து
 • நீராடி, காலைக் கழுவி, வாய் துடைத்து, உண் கலத்தை சுற்றி, நீரிரைத்து உண்பவரே உண்பார். இப்படி செய்யாமல் உண்டாரைப் போல் வாயை கழுவி போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொள்வார்.
 • கால் கழுவின ஈரம் உலர்வதற்கு முன்னே உணவு உண்ண வேண்டும். கால் ஈரம் உலர்ந்த பிறகே படுக்கைக்கு செல்ல வேண்டும். இதுவே அறிவாளர்களின் கொள்கையாகும்.
 • ஒருவன் உண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து, தூங்காமல், அசையாமல், வேறொன்றினையும் பார்க்காமல், பேசாமல், உண்கின்ற உணவை கையாலெடுத்து சிந்தாமல் நன்றாக உண்ண வேண்டும்.
 • நல்லொழுக்கத்தினின்று தவறாத பெரியோர்கள், விருந்தினர்க்கும், மூத்தோர்களுக்கும், பசுக்களுக்கும், பறவைகளுக்கும், பிள்ளைகளுக்கும் உணவு அளிக்காமல் தான் உண்ணமாட்டார்.
 • கிழக்கு திசையும், ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் மற்ற திசைகளும் நல்லவைகளாகும். உச்சிப் பொழுதில் உண்ணுதல் நலம்.
 • படுத்தோ, நின்றோ, வெளியிடத்தில் நின்றோ உண்ணல் ஆகாது. விரும்பி மிகுதியாக உண்ணலும் ஆகாது. கட்டில் மேலிருந்து உண்ணுதல் கூடாது.
 • தம்மிலும் பெரியாருடன் உண்ணும்போது அவர்க்கு முன்னே தாம் உண்ண மாட்டார். முந்தி எழுந்திருக்க மாட்டார். அவரை நெருங்கி அமர்ந்து உண்ணமாட்டார். எல்லா செல்வமும் பெறுவதாயினும் வலப்புறம் அமர்ந்து உண்ணார்.
 • உணவை உண்ணும்போது கசப்பானவைகளை கடைசியிலும் தித்திப்பான பண்டங்களை முதலாகவும் மற்றவைகளை இடையிலும் உண்ண வேண்டும்.
 • வாயை நன்றாக கொப்புளித்து, நன்றாக துடைத்து, முக்குடி குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும்.

Friday, 11 June, 2010

பிரணாயாமம் எப்படி யோகத்திற்கு உதவுகிறது?

சுவாசத்தை
 1. ஓரங்குலம் உள்ளே அடக்கினால் உலகப்பற்று நீங்கும்.
 2. இரண்டங்குலம் உள்ளே அடக்கினால் ஆனந்தம் உண்டாகும்.
 3. மூன்றங்குலம் உள்ளே அடக்கினால் கவிபாடும் வல்லமை உண்டாகும்.
 4. நான்கு அங்குலம் உள்ளே அடக்கினால் வாக்கு சித்தி உண்டாகும்.
 5. ஐந்து அங்குலம் உள்ளே அடக்கினால் முக்கால ஞானம் உண்டாகும்.
 6. ஆறு அங்குலம் உள்ளே அடக்கினால் கணம் குறைந்து மேலெழும் சக்தி ஏற்படும்.
 7. ஏழு அங்குலம் உள்ளே அடக்கினால் வாயுவேக சக்தி உண்டாகும்.
 8. எட்டு அங்குலம் உள்ளே அடக்கினால் அஷ்டமா சித்திகளை பெறலாம்.
 9. ஒன்பதன்குலம் உள்ளே அடக்கினால் நவ நிதிகளை பெறலாம்.
 10. பத்தங்குலம் உள்ளே அடக்கினால் பத்து உருவங்கள் எடுக்கும் ஆற்றல் உண்டாகும்.
 11. பதினோரு அங்குலம் உள்ளே அடக்கினால் நிழல் இன்றி உலகில் உலாவலாம்.
 12. பனிரெண்டு அங்குலம் உள்ளே அடக்கினால் பிரமரந்திரத்தில் அடங்கும் போது அமுதம் கிடைகிறது.

Tuesday, 8 June, 2010

எது முக்கியம்?

"சாமநாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை வீட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பனெங்கள் ஈசனே".
- சிவவாக்கியர்.

ஆசை வலைக்குள் சிக்கி அகப்பட்டுகிடக்கும் மாந்தர், சாத்திர தோத்திரங்களை ஓதுவதால் மட்டும் எவ்விதப் பயனுமில்லை என்கிறார். காம இச்சைகளை விட்டு நீங்கும் நெஞ்சில், இறைவன் முந்தி வந்துறைகிறான், என்கிறார். அதுமட்டுமில்லாது, இறைவழிபாடிர்க்காக சிலர் செய்யும் அறியாமைச் செயல்களைத் தன்னில்வலப் படுத்திக் கொண்டு எள்ளி நகையாடுகிறார்.

"நான் யார்"

புத்தருக்குள் நான் யார்? என்ற கேள்வி எழுந்ததால் புத்த மதம் தோன்றியது. நரேன்தரனில் நான் யார் என்ற கேள்வி எழுந்ததால் விவேகானந்தராக மாறி பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறினார். ரமண மகரிஷியும் அதே கேள்வியால் சிறிய வயதில் துறவறம் பூண்டு ஏகாந்தத்தை தனக்குள் உணர்ந்தார். அந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்தால் தாயுமானவர் சிறிய வயதிலயே இறையுணர்வு பெற்றார். பிரபஞ்சத்தில் பூரணமான இறைநிலை மனிதனிடம் அறிவாய் இயங்கக்கண்டார்கள் ஞானிகள். சன்யாசம் என்பது நான் என்னும் அகந்தையின் அழிவின்றிவெளி விஷயங்களை மட்டும் துறப்பதல்ல என்ற உணர்ந்து வழிகாட்டினார்கள். நான் என்பதை உடலாய் உணர்ந்தால் துன்பந்தான் என்பதை மகரிஷி அவர்களும்,

"உடலை எனை நினைந்தேன் உணர்சிகள்
வருத்தின ஊடலில் உயிராய் நினைந்து
உணர்ந்து அறிவில் நிறைந்தன"
என்ற பாடலில் விளக்குகிறார். மனித உருவை உடலாய் பார்ப்பதால் எதிர்பார்ப்பு, வருத்தம், துக்கம், சோகம் முதலியன உருவாகின்றன. அதை அன்பும் கருணையும் நிறைந்த உயிராக சிவமாகபார்த்தால் பேரின்பம் தான்.

"நான் யார்" என்று ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் கொலை, பழி, பாவம் அற்றுப் போகும். மகரிஷி அவர்களின் கனவின்படி போரில்லா நல்லுலகம் உருவாகும். இந்தப் பாதையின் மூலமாக குறிகிய எண்ணங்கள் மாறிப் பரந்த மனப்பான்மை உருவாகிறது. இந்த நிலையான தெயவ்வதன்மை அல்லது பூரணத்துவம் தான் முழுமையான தன்உணர்வுள்ள நிலை. அளவிடமுடியாத ஆனந்தமும் அதுவே.
அதை திருமூலர் ஒரு பாடலில்,

நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும்
நான் என்றும் தான் என்றும் இரண்டில்லை என்பதை
நான் என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான் என்று நானும் நினைப் பொழிந்தேனே
.......என்கிறார்.

Sunday, 6 June, 2010

கோலம் போடுவது ஏன்?


நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றிலுமே தெய்வீகம் இருப்பதாக நம்பினார் நம் முன்னோர். வாழ்கையில் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஒருவித தெய்விக தொடர்பு இருக்கும்படி வாழ்ந்தனர். எல்லா பொருட்களிலும் இறைவன் இருப்பதாக நம்பினார்.சொல்லிலும், செயலிலும் தெய்வத் தொடர்பு இருந்தது.

எதையோ படித்து வெட்டியாய் பொழுது போக்காமல்,நீதி நெறிகளை தெரிந்து கொள்ளவும், பண்பாடுகளை அறிந்து கொள்ளவும்,
வாழ்வின் தரத்தை உயர்த்தி கொள்ளவும், புராணங்கள், திருமறைகள், திவ்ய பிரபந்தம் போன்ற வற்றைப் படித்தனர். பெரியோர் மூலம் அதன் பொருளை அறிந்தனர். நம்மோடு தெய்வத்தையும் பிணைத்து வைத்திருக்கின்றனர். காலையில் வாசல் தெளித்து, பெறுக்கி, கோலமிடுகிற வழக்கம் உண்டு. அப்படி செய்கிற வீடுகளுக்கு மகாலட்சுமி வருவாள்.

கோலமிடுவது வாசலுக்கு அழகு செய்வது மட்டுமல்ல. மங்களகரமானதும் கூட என்பது என் கொள்கை, எந்த நல்ல காரியமானாலும் கோலம் இல்லாமலிராது. இதில் விதவிதமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் கோலமிடுவது, தனிக்கலை. இந்தக் களையும் வளருகிறது. இது தவிர குனித்து, நிமிர்ந்து சில நிமிடங்கள் கோலம் போடுவதால், உடற்பயிற்சி செய்த மாறியும் ஆகிறது. மேற்குறித்த காரியங்களில் தெய்வம், கலை, உடல்நலம், சுத்தம் ஆகியவை அடங்கியுள்ளது. இதெல்லாம் நன்மைக்குத்தானே!

சூரியனை வழிபடுகிறோம்; பொங்கல் பண்டிகையின் போது சூரிய நாராயணனை வழி படுகிறோம். புத்தாடை அணித்து பொங்கல் செய்து படைக்கிறோம். புது நெல் அறுவடை ஆகி, வீட்டுக்கு வருகிறது. இதில் நமக்கு ஆடைகளும், விருந்து சாப்பாடும் கிடைகிறது. அதே சமயம், தெய்வ வழிபாடும் உள்ளது.

வீட்டு நிலைப்படி இருக்கிறது. அதற்கு, மஞ்சள் பூசி, பொட்டு வைத்து அழகுபடுதுகிறோம். மாவிலை தோரணம் கட்டுகிறோம். நிலைப்படிகளில் ஒருத்தி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. புது வீடு கட்டி, கிரகபிரவேசம் செய்யும் பொது, நிலைப்படிக்கு பூஜை செய்வதை பாக்கலாம். இது அழகு செய்வதோடு மட்டுமில்லாமல், ஒரு தெய்வ வழிபாடும் உள்ளது.

வீடுகளில் பசு மாடு வைத்து பூஜிப்பர். பசுவின் உடலில் பல தேவதைகள் இருக்கின்றனர். பசுவிடமிருந்து பால், தயிர், வெண்ணை எல்லாம் நமக்கு கிடைக்கிறது. பசுவுக்கு பூஜை செய்கிறோம்; வழிபடுகிறோம்; பசுவின் காப்பதில் நமக்கு ஆதாயம் உள்ளது; அதே சமயம் தெய்வ வழிபாடும் நடக்கிறது. வாழ்க்கையோடு தெய்வமும் இணைத்திருக்கிறது. ஆலயம் என்றால் கலை, தெய்வம் இரண்டும் சேர்ந்துள்ள இடமாகிறது, இங்கே பக்தியும் வளருகிறது! நன்றி!

Saturday, 5 June, 2010

பக்தியை பெருக்குங்கள்!


தராசு முள்ள நேராக ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரன்டு தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுக்களில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், நேராக நிற்காமல் அந்த பக்கமும் இந்த பக்கமும் தராசு முள் ஆடிக்கொண்டே இருக்கும்.

அதுபோல
, மனம் ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், மனதின் அடித்தளத்தில் விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி இருக்க வேண்டும்; அதில் ஏற்ற தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும். ஒரு தட்டில் ஆசைகள் அனைத்தையும் வைத்து, மற்ற்றொரு தட்டில் பக்தியை வைத்துப் பார்த்தால், பக்தியே பளுவானது; வலுவானது. மற்ற வ்சயங்களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசையை வைத்தால் அவனையே பிடித்து விடலாம்.
சரணடைந்தவர்களை அவன் விட்டுவிடுவதில்லை; கை தூக்கி விடுகிறான், பக்தி செய்து சரணடைந்தால் முக்தி அளிக்கிறான்.

நமக்கு இப்போது கிடைத்துள்ள மனிதப்பிறவி புதிதாக முதன்முதலாக கிடைத்ததல்ல; இதற்குமுன் எத்தனையோ பிறவி எடுத்தாகிவிட்டது; ஆத்மா அழிவற்றது. அது, மேலும் , கீழும் போய்ப் போய் வருகிறது. கர்ம வினை தீர்ந்து, புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், கொஞ்சம் உயர்ந்த ஜென்மா கிடைக்கிறது. இப்படி புண்ணிய பலன் கூடுதலாக கூடுதலாக பட்சி, பிராணி, பசு, மனிதன் என்று வரிசையாக பிறப்பு வருகிறது. மனித ஜென்மாவில் கூட எத்தனையோ மனித ஜென்மா எடுத்து புண்ணியம் சேர்த்திருந்தால், இந்த ஜென்மாவிலும் சுகபோகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு! புண்ணிய காரியம் செய்வதற்கும் பிராப்தம் வேண்டும். சில சமயம் மனம் அதில் ஈடுபடாது. வேறு எதிலோ தான் ஈடுபடும்.

புண்ணிய
காரியம் என்றால், தான-தர்மங்கள் செய்வது மட்டும்மல்ல; தெய்வ பக்தி, தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானம்இவைக்களுக்கும் புண்ணியம் உண்டு. இதையும் தவிர, மகான்களின் தரிசனம் பெரிய புண்ணியம்.நாம் இப்போது மனித பிறவியை எடுத்துள்ளோம், இதற்கு முன் ஜென்மாவில் நாம் மேற்கூறிய எதையாவது செய்திருக்கலாம்.மஹா புருஷர்களை சந்தித்திருக்கலாம். எல்லா காலங்களிலும் மகா புருஷர்கள் இருந்திருக்கின்றனர். ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒருவரை தரிசித்திருக்கலாம். வணங்கி இருக்கலாம். அது நமக்கு தெரியாவிட்டாலும் கூட, இப்போது கிடைத்துள்ள மனித ஜென்மாவையும், அனுபவிக்கும் சுகங்களையும் வைத்துப்பார்த்தால், இதற்கு முன் யாரையோ தரிசித்த புண்ணியம் தான் காரணம் என யூகிக்கலாம்.


அதே போல, இந்த ஜென்மாவிலும் இப்போது உள்ள மகான்களை தரிசித்து வணங்கிவிட்டால், தெய்வ பக்தி செய்து வந்தால், அடுத்த பிறவி இன்னும் சிறப்பானதாக இருக்கும். உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு சர்வமும் ஈஸ்வர மாயம், எல்லாமே பரம்பொருள் என எண்ணுகின்ற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்கிற மோட்ச சாம்ராஞ்சியத்தை அடையமுடியும்.
இப்போது அதன் எல்லைக்கோடு வரையாவது போக முடியுமா என்பது தான் என் கேள்வி?

கடவுள் பக்தி இல்லாதவரா நீங்கள்?


னிதன் முயற்சி செய்து சோர்ந்து போன சமயம்,' தெய்வமேஆக, கடைசி நேரத்திலாவது தெய்வத்தை நினைக்க வேண்டியுள்ளது. அவனிடம் சரணடைய வேண்டியுள்ளது. இதெல்லாம் வேதாந்தம் சார், நமக்கு புரியாது... என்பவரும் உண்டு!
அனால் அதில் முழுமையாக இறங்கும் பொது, உண்மை புலப்படும், மனது தெளிவு பெரும். "மனத்தெளிவு ஏற்பட்டு, இந்த உலகமும், அதில் உள்ள யாவுமே பரபிரம்மம்" தான் என்ற உண்மை நிலை உணர்த்துவதே முக்திக்கு வழி. வாழ்நாளில் சிறிதளவாவது 'தெய்வ சிந்தனை இருப்பது நல்லது', என்பது பெரியோர் வாக்கு.
ஏதாவது பாவத்தை மனிதன் செய்துகொண்டே தான் இருக்கிறான். எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்து புண்ணிய காரியங்களையே செய்து வந்தாலும், எதாவது பாவத்தை செய்ய நேரிடுகிறது. பாவம் என்பது 'மனதாலோ, வாக்கலோ, இந்திரியங்கலாலோ' எதோ ஒன்றால் செய்யப்பட்டு வருகிறது.
ஒருவரை பற்றி தவறாக எண்ணி விடுகிறோம்; ஒருவரை கடுமையாக தூசித்து விடுகிறோம்; ஒரு ஜீவனுக்கு இம்சை செய்து விடுகிறோம்... இப்படி ஏதாவது ஒன்றால், ஏதாவது ஒரு பாவத்தை செய்து விடுகிறோம். இது இயற்கை!
இப்படி மனிதனிடம் சில பாவங்கள், தோஷங்கள் இருக்கின்றன. அனாலும், இப்படிப்பட்டவர்களுக்கு கருணை காட்டுகிறான் பகவான்!எப்படியாவது மனிதன் திருந்தி, பக்தனாகி தன்னை வந்தைடயாட்டும்' என்பது அவன் எண்ணம்.
சிலருக்கு தெய்வ பக்தி இருக்காது; ஆனாலும் 'நேர்மை, நீதி, கருணை, அன்பு, தயை' போன்ற குணங்கள் இருக்கும். இந்த குணங்களும் இறைவன் தான் என சொல்லபடுகிறது. இந்த குணங்கள் உள்ளவனிடமும் இறைவன் இருக்கிறான். கடவுள் என்பது பரமாத்மா; உயிர்கள் என்பது ஜீவாத்மா;இந்த பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றாகவேண்டும்: அது தான் முக்தி என்றனர்.
பரமாத்மாவாகிய தன்னை ஜீவாத்மா வந்தைடைவதற்கான உபாயங்களை சொல்லிருகின்றனர். பரமாத்மாவே வந்து ஜீவாத்மாகளை கை தூக்கி விடுவது பக்தர்கள் விஷயத்தில் நடக்கலாம்; மற்றவர்கள், தாங்களாகவே முயற்சி செய்து தான் அவனை அடைய வேண்டும்.
பக்தி, பிரபத்தி தான் உபாயம் என்றனர். பகவானை பக்தி செய்து, அவனே கதி என்று அவனையே சரணடைந்துவிட்டால், அவன் அழைத்து கொள்வான், இரண்டும் ஒன்றாகி விடும்.இப்படியாக, ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றாகிவிட்டால், துணை' என்கிறான்.
அவன் பிறவி கடலை கடந்து, பகவானோடு கலந்து விடுகிறான்.