நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Sunday 15 January 2017

Which Cow milk is better? Tamil

Tuesday 23 August 2011

SUPPORT FOR ANNA HAZARE


Saturday 4 June 2011

அதுவும் கூடாது இதுவும் கூடாது!

பாரதப்போரின் உச்சக்கட்டம்...கர்ணனுடன் அர்ஜுனன் விற்போர் செய்தான். ஆனால், கர்ணனின் ஆக்ரோஷத்துக்கு முன்னால், அர்ஜுனனின் காண்டீப சாகசங்கள் எடுபடவில்லை. பாசறைக்கு திரும்பிய அவனை தர்மர் அழைத்தார்.
""போர் செய்யும் லட்சணமா இது! உனது காண்டீபத்தை (வில்) உலகப்புகழ் பெற்றது என்றும், நீயே வில்வித்தையில் சிறந்தவன் என்றும், நீ வைத்த குறி தப்பாது என்றும் ஆன்றோர்கள் சொல்வதாக பெருமையடித்துக் கொண்டாய். இப்போது என்னாயிற்று உன் காண்டீபத்தின் வல்லமை,'' என இகழ்ச்சியாகப் பேசினார் தர்மர்.
அண்ணன் தர்மர் சொன்ன வார்த்தைகள் தம்பி அர்ஜுனனின் மனதை உறுத்தியது. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன் காண்டீபத்தை யாராவது கேலி செய்தால், அவர்களைக் கொன்று விடுவதாக சபதம் செய்திருந்தான் அர்ஜுனன். எனவே, அண்ணன் என்றும் பாராமல், அவரை நோக்கி வில்லை உயர்த்தினான். கண்ணபிரான் ஓடிவந்து தடுத்தார். அவரிடம், தனது சபதத்தை விளக்கினான் அர்ஜுனன்.
கண்ணன் ஒரு யோசனை சொன்னார்.
""அர்ஜுனா! ஒருவரைக் கொலை செய்து தான் அவரது <உயிர் போக வேண்டும் என்பதில்லை. அவர் மீது வீணான பழி போட்டாலே கொலை செய்ததற்கு சமம். எனவே, தர்மர் மீது ஏதாவது பழிபோடு,'' என்றார். அர்ஜுனனும் ஏதோ ஒரு பழியைப் போட்டு சபதத்தை நிறைவேற்றினான். பின்னர், தன் அண்ணனைக் கொன்றதற்கு சமமான பாவத்தை செய்துவிட்டோமே என மனம் வருந்தி தற்கொலைக்கு முயன்றான். அப்போதும் கண்ணன் தடுத்தார்.
""அர்ஜுனா! இதென்ன விபரீதம்! சாஸ்திரத்தில் இதற்கும் பரிகாரம் உண்டு. உன்னை நீயே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்கு சமம். நீ உன்னைப் பற்றி ஜம்பமாக பிறரிடம் ஏதாவது பேசு,'' என்றார்.
பிறர் மீது பழிபோடுவதும், தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் கொலைக்கும், தற்கொலைக்கும் ஈடானது என்பதைப் புரிந்து கொண்டீர்களா!

                                                                                                                       Thanks to Dinamalar

Saturday 19 March 2011

பகுத்தறிவு: மிக்ஸி க்ரைண்டர் லேப்டாப் அரிசி இலவசம்!

பகுத்தறிவு: மிக்ஸி க்ரைண்டர் லேப்டாப் அரிசி இலவசம்!

Monday 28 February 2011

அஞ்செழுத்து அஸ்திவாரம்

ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார்.
இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.
""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்

Tuesday 15 February 2011

பெண்கள் - பணிகளில் அடங்கிய பயிற்சிகள்


துணி துவைத்துப் பிழிதல்  -  கை அழுத்தப் பயிற்சி
பெருக்குதல், வீடு துடைத்தல்   - இடுப்புப் பயிற்சி
பாத்திரம் கழுவுதல்  - கைப் பயிற்சி
சப்பாத்தி இடுதல்   - முழங்கை அசைவுப் பயிற்சி
மாவு பிசைதல்  - விரல்களுக்கான பயிற்சி
தேங்காய் துருவுதல்  - தோல் பயிற்சி
வீடு ஒட்டடை அடித்தல் - கழுத்துப் பயிற்சி
தோசை சுட்டு உபசரித்தல் - ஓட்டப் பயிற்சி
பரணியிலிருந்து பொருட்களை இறக்குதல்/ ஏற்றுதல்  - கணம் தூக்கும் பயிற்சி
வீட்டை சுற்றி வந்து பொருட்களை ஒழுங்குபடுத்துதல் - நடைப் பயிற்சி
குழந்தைகளை குளிப்பாட்டுதல் - அடிவயிற்றுப் பயிற்சி
மொட்டை மாடி ஏறி, வற்றல் போடுதல் - மூட்டுப் பயிற்சி
பால்கணக்கு, மளிகை கணக்கு போடுதல் - மூளைக்கு பயிற்சி
பாடம் சொல்லித் தருதல் - நினைவுப் பயிற்சி
கணவரிடம் திட்டு வாங்கும் பொழுது ( இதுவும் வேலைகளில் ஒன்று தான்) - இதயம் வலுப்பெறுகிறது
வளர்த்த பிள்ளைகள் வசைபாடும் பொழுது - மனம் பக்குவமடைகிறது
உற்றார் உறவினர் குறை சொல்லும் பொழுது - கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்ற ஞானம் கிடைக்கிறது

Thursday 10 February 2011

உயிருடல்

குருவும், அவரை நாடி வந்த சீடரும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி.(கற்பனையே)

ஆ: தங்கள் வயது என்ன?
கே:முப்பத்தியாறு

ஆ:யோசித்து சரியாகக் கூறுங்கள்?
கே:முப்பத்தைந்து வயது, ஒன்பது மாதம், இருபத்தொரு நாள்.

ஆ:தாயிடமிருந்து பிறந்து இவ்வளவு நாள் ஆகியுள்ளதா?
கே:ஆமாம்.

ஆ:அதற்க்கு முன் நீங்கள் இல்லையா?
கே:தாயின் கர்ப்பத்தில் பத்து மாதங்கள் இருந்தேன்.

ஆ:அதற்க்கு முன் நீங்கள் இல்லையா?
கே:தெரியாது.

ஆ:அதற்கு முன், தந்தையின் கருவறையில் விந்தணுவாக இரண்டு மாதங்கள் இருந்தீர். அதற்க்கு முன் அவன்  இரத்தத்திலும் அதற்குமுன் அவன் உண்ட ஆகாரத்திலும் உயிரணுவாக இருந்தீர்கள். அப்படியானால் செத்த பின் எங்கே, எப்படி இருப்பீர்கள்?
கே:ஒன்றுமில்லை.

ஆ:அப்படித்தான் எல்லோரும் தீர்மானமாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அறியாமை இருள் அழுத்தி மூடிக் கொண்டிருகிறது. (கையை மூடிக் கொண்டு) இதனுள் என்ன இருக்கிறது?
கே:தெரியாது.

ஆ:(கையைத் திறந்து காட்டி) இப்போது கூறும்?
கே:சாவிக்கொத்து கையில் இருந்தது.

ஆ:திறந்து காட்டினால் தெரிந்தது
ஆமாம்.

ஆ:தெரிந்து கொள்ள முயலுங்கள். நாளைக்கு எங்கே இருப்பீர்கள்?
கே:கோயம்புத்தூரில்.

ஆ:அங்கு செல்ல எண்ணியுள்ளீர்கள். அது போல செத்தபின் எங்கே போகவேண்டும்மென்று குறி வைத்து செல்ல வேண்டும் என . அதவாது
சுவர்க்கம், நரகமென்று சொல்கிறார்களே?
கே:அதை நம்பமுடியவில்லை.

ஆ:நீங்கள் நமபாததால் அது இல்லாமல் போய்விடுமா? தெரிந்து கொள்ள முயல வேண்டாமா? உங்களுக்குள் இருக்கும் உயிரை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கே:உயிரைப் பார்க்க  முடியாது.

ஆ:ஏன் முடியாது.
கே:உயிருக்கு உருவமில்லை.

ஆ:உன் கண்ணுக்கு தெரியாததால் அதற்க்கு உருவமில்லையா? காற்றைப் பார்க்க முடியாதென்பதற்க்காக அது இல்லாமல் போய் விட்டதா. (ஒரு பொருளைக் காட்டி) இதைப் பார்ப்பது எது?
கே:கண்.

ஆ:பிணத்திடம் கண் இருந்தாலும் பார்க்க முடியாது. ஆகவே கண்ணைக் கருவியாகக் கொண்டு காண்பது உயிர். அது போல இன்பதுன்பம் அனுபவிப்பது, கேட்பது, ருசிப்பது, நுகர்வது, பேசுவது, சம்பாதிப்பது எல்லாம் உயிர் தான். உயிர்பொருள் உடலெடுக்க நான்கு வழிகள் இருக்கின்றன தெரியுமா.
கே:தெரியாது.

ஆ:புழுக்கத்தால் ஊர்வனவாகவும், வித்திலிருந்து தாவரங்களும், முட்டையிலிருந்து பறவை இனங்களும், சினை தரிப்பதால் மிருகங்களும், மனிதன் முதலானவகைகளும் உடலெடுத்துத் தோற்றத்துக்கு வருகின்றன. அவைகளை எழுவகை என்றனர் ஆன்றோர்.
கே:அவையாவை.

ஆ:ஊர்வன, நீர்வாழ்வன, தாவரங்கள், பறவை இனம், விலங்கினம், மனிதன், தேவர்-- என எழுவகைத் தோற்றம்.
கே:மனிதன் வரை ஆறும் தெரிகின்றது, தேவர் யாறன தெரியவில்லையே.

ஆ:மனித உருவில் மிருகங்களும் இருக்கின்றன. தேவர்களும் இருக்கிறார்கள்.
கே:இதனை பிரித்தறிவது எங்கனம்.

ஆ:ஊனக் கண்ணால் வெளியுலகை மாத்திரம் காணக்கூடிய மனத்தால் வளர்பவர் மனிதர். ஒரு சற்குரு பெருமானுடைய பரிசுத்த தேவ ஆவியால் மறுபிறப்படைந்து ஞானக் கண்ணால் ஆன்ம லோகம் தெரியப் பெற்று தேவ ரகசியங்கள் தெரிந்தவர் தேவர்கலாகும்.
கே:ஆன்ம லோகம் எங்கிருக்கிறது.

ஆ:காணும் உடலில் காண முடியாத உயிர் ஊடுருவி இருப்பது போல காணக் கூடிய அண்டசராசரங்கள் அவ்வளவிலும் ஊடுருவி நிலைத்து நிற்பது ஆன்மலோகம். முதலில் தனக்குள் இருக்கும் உயிரைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கே:உடல் முழுவதும் ஊடுருவி நிற்கும் உயிரைத் தனியாக காண்பது எப்படி?

ஆ:ஒரு வித்து மரமாக வளர்ந்தபின் அதன் உயிராகிய முனை ஆணிவேரான ஓரிடத்தில் இருக்கும். அதைப் போல தந்தையின் விந்தணுவும், தாயின் சினைமுட்டையும் சேர்ந்து இந்த உடல் உண்டானாலும் உயிரின் மூலமான விந்து ஓரிடத்தில் தான் இருக்கிறது. அங்கு தான் மனம் இயங்குகிறது. அறிவு மறைந்திருக்கிறது.
கே:எங்கே?

ஆ:தேவரகசியம் என்பதால் அதை வெளிப்படையாக பேச முடியாது.
கே:அதை மறைப்பானேன். 

சிற்றின்ப விசயங்களைப் பேசக்கூடாதேன்பதைப் போல, பேரின்ப ரகசியங்களைப் பக்குவம் வந்தவருக்கு பக்குவம் பெற்றவர்கள் பக்குவப்படி வெளியாக்க வேண்டும். தூல சம்பந்தத்திற்கு திட்டமிட்டு திருமணம் செய்வது போல ஜீவா சம்பந்தத்திற்கு அதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்க்கு முன் உயிர் உடலைக் கட்டும் விதம் தெரிய வேண்டும். அதை அடைவதற்கு யோகம் உனக்கு உதவும். அந்த யோகம் இப்போது அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் விதத்தில் உள்ளது. பெற்று பேரின்பமடையவேண்டும். 
                                                               வாழ்க  வளமுடன்