நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Thursday, 10 February, 2011

உயிருடல்

குருவும், அவரை நாடி வந்த சீடரும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி.(கற்பனையே)

ஆ: தங்கள் வயது என்ன?
கே:முப்பத்தியாறு

ஆ:யோசித்து சரியாகக் கூறுங்கள்?
கே:முப்பத்தைந்து வயது, ஒன்பது மாதம், இருபத்தொரு நாள்.

ஆ:தாயிடமிருந்து பிறந்து இவ்வளவு நாள் ஆகியுள்ளதா?
கே:ஆமாம்.

ஆ:அதற்க்கு முன் நீங்கள் இல்லையா?
கே:தாயின் கர்ப்பத்தில் பத்து மாதங்கள் இருந்தேன்.

ஆ:அதற்க்கு முன் நீங்கள் இல்லையா?
கே:தெரியாது.

ஆ:அதற்கு முன், தந்தையின் கருவறையில் விந்தணுவாக இரண்டு மாதங்கள் இருந்தீர். அதற்க்கு முன் அவன்  இரத்தத்திலும் அதற்குமுன் அவன் உண்ட ஆகாரத்திலும் உயிரணுவாக இருந்தீர்கள். அப்படியானால் செத்த பின் எங்கே, எப்படி இருப்பீர்கள்?
கே:ஒன்றுமில்லை.

ஆ:அப்படித்தான் எல்லோரும் தீர்மானமாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அறியாமை இருள் அழுத்தி மூடிக் கொண்டிருகிறது. (கையை மூடிக் கொண்டு) இதனுள் என்ன இருக்கிறது?
கே:தெரியாது.

ஆ:(கையைத் திறந்து காட்டி) இப்போது கூறும்?
கே:சாவிக்கொத்து கையில் இருந்தது.

ஆ:திறந்து காட்டினால் தெரிந்தது
ஆமாம்.

ஆ:தெரிந்து கொள்ள முயலுங்கள். நாளைக்கு எங்கே இருப்பீர்கள்?
கே:கோயம்புத்தூரில்.

ஆ:அங்கு செல்ல எண்ணியுள்ளீர்கள். அது போல செத்தபின் எங்கே போகவேண்டும்மென்று குறி வைத்து செல்ல வேண்டும் என . அதவாது
சுவர்க்கம், நரகமென்று சொல்கிறார்களே?
கே:அதை நம்பமுடியவில்லை.

ஆ:நீங்கள் நமபாததால் அது இல்லாமல் போய்விடுமா? தெரிந்து கொள்ள முயல வேண்டாமா? உங்களுக்குள் இருக்கும் உயிரை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கே:உயிரைப் பார்க்க  முடியாது.

ஆ:ஏன் முடியாது.
கே:உயிருக்கு உருவமில்லை.

ஆ:உன் கண்ணுக்கு தெரியாததால் அதற்க்கு உருவமில்லையா? காற்றைப் பார்க்க முடியாதென்பதற்க்காக அது இல்லாமல் போய் விட்டதா. (ஒரு பொருளைக் காட்டி) இதைப் பார்ப்பது எது?
கே:கண்.

ஆ:பிணத்திடம் கண் இருந்தாலும் பார்க்க முடியாது. ஆகவே கண்ணைக் கருவியாகக் கொண்டு காண்பது உயிர். அது போல இன்பதுன்பம் அனுபவிப்பது, கேட்பது, ருசிப்பது, நுகர்வது, பேசுவது, சம்பாதிப்பது எல்லாம் உயிர் தான். உயிர்பொருள் உடலெடுக்க நான்கு வழிகள் இருக்கின்றன தெரியுமா.
கே:தெரியாது.

ஆ:புழுக்கத்தால் ஊர்வனவாகவும், வித்திலிருந்து தாவரங்களும், முட்டையிலிருந்து பறவை இனங்களும், சினை தரிப்பதால் மிருகங்களும், மனிதன் முதலானவகைகளும் உடலெடுத்துத் தோற்றத்துக்கு வருகின்றன. அவைகளை எழுவகை என்றனர் ஆன்றோர்.
கே:அவையாவை.

ஆ:ஊர்வன, நீர்வாழ்வன, தாவரங்கள், பறவை இனம், விலங்கினம், மனிதன், தேவர்-- என எழுவகைத் தோற்றம்.
கே:மனிதன் வரை ஆறும் தெரிகின்றது, தேவர் யாறன தெரியவில்லையே.

ஆ:மனித உருவில் மிருகங்களும் இருக்கின்றன. தேவர்களும் இருக்கிறார்கள்.
கே:இதனை பிரித்தறிவது எங்கனம்.

ஆ:ஊனக் கண்ணால் வெளியுலகை மாத்திரம் காணக்கூடிய மனத்தால் வளர்பவர் மனிதர். ஒரு சற்குரு பெருமானுடைய பரிசுத்த தேவ ஆவியால் மறுபிறப்படைந்து ஞானக் கண்ணால் ஆன்ம லோகம் தெரியப் பெற்று தேவ ரகசியங்கள் தெரிந்தவர் தேவர்கலாகும்.
கே:ஆன்ம லோகம் எங்கிருக்கிறது.

ஆ:காணும் உடலில் காண முடியாத உயிர் ஊடுருவி இருப்பது போல காணக் கூடிய அண்டசராசரங்கள் அவ்வளவிலும் ஊடுருவி நிலைத்து நிற்பது ஆன்மலோகம். முதலில் தனக்குள் இருக்கும் உயிரைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கே:உடல் முழுவதும் ஊடுருவி நிற்கும் உயிரைத் தனியாக காண்பது எப்படி?

ஆ:ஒரு வித்து மரமாக வளர்ந்தபின் அதன் உயிராகிய முனை ஆணிவேரான ஓரிடத்தில் இருக்கும். அதைப் போல தந்தையின் விந்தணுவும், தாயின் சினைமுட்டையும் சேர்ந்து இந்த உடல் உண்டானாலும் உயிரின் மூலமான விந்து ஓரிடத்தில் தான் இருக்கிறது. அங்கு தான் மனம் இயங்குகிறது. அறிவு மறைந்திருக்கிறது.
கே:எங்கே?

ஆ:தேவரகசியம் என்பதால் அதை வெளிப்படையாக பேச முடியாது.
கே:அதை மறைப்பானேன். 

சிற்றின்ப விசயங்களைப் பேசக்கூடாதேன்பதைப் போல, பேரின்ப ரகசியங்களைப் பக்குவம் வந்தவருக்கு பக்குவம் பெற்றவர்கள் பக்குவப்படி வெளியாக்க வேண்டும். தூல சம்பந்தத்திற்கு திட்டமிட்டு திருமணம் செய்வது போல ஜீவா சம்பந்தத்திற்கு அதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்க்கு முன் உயிர் உடலைக் கட்டும் விதம் தெரிய வேண்டும். அதை அடைவதற்கு யோகம் உனக்கு உதவும். அந்த யோகம் இப்போது அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் விதத்தில் உள்ளது. பெற்று பேரின்பமடையவேண்டும். 
                                                               வாழ்க  வளமுடன்

5 comments:

asiya omar said...

வாழ்க வளமுடன் சொல்லும் பெரியவர் யாரோ!

balaji said...

மகாபாரதத்தில் வருகிற யக்ஷ பிரச்சனம் போல் இந்த உரையாடல் உள்ளது. அருமை !

jagadeesh said...

வேதாத்திரி மகரிஷி அக்கா :))

Part Time Jobs said...

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

அண்ணாமலை..!! said...

நண்பரே! நல்ல தெய்வீக சிந்தனை!
என்னிடம் விடையின்றி சில கேள்விகள் உள்ளன!
யாரேனும் தெரிந்தாலும் விளக்கினால் மகிழ்வேன்!

*
ஏழு பிறப்பு என்பது எல்லா உயிர்களுக்குமா?
அல்லது
மனிதனுக்கு மட்டுமா?

உயிர்களுக்கு என்று சொன்னால்..
ஏழு பிறப்பில் மனிதன் தானே இறுதிப்பிறப்பு!
பிறகெப்படி மீண்டும் பிறப்பு வரும்!

அல்லது
அடுத்த சுழற்சியாக ஏழுபிறப்பு வருமா?

அல்லது
சரியானபடிக்கு நன்மை புரிந்தவர்கள்..
இந்தச் சுழற்சியிலிருந்து தப்பி(பிறவாமை!)
விடுவரா?
துன்பமிழைத்தோர் சுழற்சியில் மீண்டும் சிக்குவரா?

உண்மையில்,
அப்படியொரு சுழற்சி இருப்பதனால்தான் "ஏழேழ் பிறப்பு" என்கின்றனரா?
அப்படி ஏழேழ் பிறப்பு என்றால்,
அந்த ஏழேழ் பிறப்புடன் பிறப்புகள் முடிவு பெறுகிறதா?

தெளிவித்தால் மகிழ்வேன்!

யோகம் ஒன்றே இதற்கு பதிலென சுருக்கமாக முடித்துவிட மாட்டீர்கள் என நம்புகிறேன்!

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன..!
நன்றிகள்!

__/\__

Post a Comment